Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை பார்த்து நிறைய கத்துக்கிட்டேன்.. இளம் இந்திய வீரர் பற்றி மனம் திறக்கும் ஜாஸ் பட்லர்

துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மன்னனாக விளங்கி வருபவர் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர். நடந்து முடிந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் கடினமான ஆடுகளத்தில் களமிறங்கி சதம் விளாசினார். தற்போது ஜாஸ் பட்லர் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஜாஸ் பட்லர் தனது கருத்துக்களை எழுதி இருந்தார்.

Recommended Video

Jose Butler hopes to draw inspiration from the Rishab Pant exploitation in Australia

அதில் டி-20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லும் என்று நம்பியதாகவும், தற்போது அரையிறுதியில் வெளியேறியது மிகுந்த மன வேதனையை தந்ததாகவும் பட்லர் கூறியுள்ளார். தற்போது கிரிக்கெட்டை பற்றி நினைக்காமல் துபாயில் விடுமுறையை கழிப்பதாக பட்லர் கூறியுள்ளார்.

தற்போது இங்கிலாந்துக்கு காத்திருக்கும் மற்றொரு சவால் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்ற வேண்டும். இந்த கடினமான தொடர் குறித்தும் மனம் திறந்துள்ளார் ஜாஸ் பட்லர்

 டெஸ்ட் அணியில் இடம்

டெஸ்ட் அணியில் இடம்

ஒருநாள், டி-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஜாஸ் பட்லர், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 53 டெஸ்ட்டில் விளையாடி 2800 ரன்களை குவித்துள்ளார். சராசரியாக 33 ரன்கள் எடுக்கும் பட்லர், 2 சதம், 18 அரைசதம் அடித்துள்ளார்.டெஸ்ட்டில் 6வது பேட்ஸ்மேனாக இறங்கி வேகமாக ரன் குவிப்பார் என்பதற்காக மட்டும் பட்லர் அணியில் உள்ளார். ஆனால் டி-20,ஒருநாள் போட்டியில் வாங்கிய பெயரை, டெஸ்ட்டில் பெறவில்லை என்பது பட்லரின் நீண்ட நாள் சோகம்.

 ஆஸிக்கு எதிராக சொதப்பல்

ஆஸிக்கு எதிராக சொதப்பல்

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜாஸ் பட்லர் இதுவரை 10 டெஸ்ட்டில் விளையாடியுள்ளார். ஆனால் அடித்த ரன்களோ வெறும் 369 மட்டும் தான். சராசரி 20 ரன்கள் என பரிதாபமான ரெக்கார்டை தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பட்லர் வைத்துள்ளார். தற்போது இந்த ரெக்கார்டை மாற்றி அமைக்க பட்லருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

 ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலிய மண்ணில் இம்முறை நன்றாக விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பட்லர், அதற்கு தாம் இந்திய வீரர் ரிஷப் பண்டை பார்த்து நிறைய பாடம் கற்றுள்ளேன் என்றார். அதற்கு காரணம் பட்லரை விட வயதில் இளையவரான ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணில் 7 போட்டிகளில் விளையாடி 624 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 62 ரன்கள் என்பதே ஆகும்

 பாடம் கற்றேன்

பாடம் கற்றேன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் முதலில் பொறுமையாக விளையாடிய பின்னரே அதிரடியை காட்டி ரன் குவித்ததாகும், இதே முறையை தாம் பின்பற்றினால், ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புவதாக பட்லர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 11 ஆண்டுகளாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. எனவே இந்தியாவை பின்பற்றி, ஆஸ்திரேலியாவை வீழ்த்த இங்கிலாந்து வீரர்கள் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

Story first published: Tuesday, November 16, 2021, 20:45 [IST]
Other articles published on Nov 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+