For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியைவிடவும் இவர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.. ஆஸி. கேப்டன் சொல்வது யாரை தெரியுமா?

By Veera Kumar

சிட்னி: ஒருநாள் போட்டிகளில் தோனியை விடவும், சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என கை காட்டியுள்ளார் ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நடுவேயான ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நிறைவுற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து.

இத்தொடரில், இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் பின்னி பெடலெடுத்துவிட்டார்.

பட்லர் பெஸ்ட்டாம்

பட்லர் பெஸ்ட்டாம்

போட்டித் தொடரின் நிறைவு நாளில் இதுபற்றி ஆஸி. கேப்டன் டிம் பெய்னிடம் (இவரும் விக்கெட் கீப்பராக செயல்படுபவர்தான்) நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதை பாருங்கள்: பட்லர் தற்போது செம ஃபார்மில் உள்ளார். உலகில் தற்போதைய நிலையில், வெள்ளை பந்து கிரிக்கெட் ஆட்டத்தில், இவர்தான் பெஸ்ட். நான் இப்படி சொல்வதை பலரும் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

தோனி சிறப்பு

தோனி சிறப்பு

தோனி சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால் இப்போதைய நிலையில், ஜோஸ் பட்லர் அவரின் திறமையின் உச்சத்தில் உள்ளார். தனது திறமையை அவர் சிறப்பாக தெரிந்து வைத்துள்ளார். இன்சைட் அவுட் ஷாட்டுகளை அவர் சிறப்பாக ஆடுகிறார். அதை சரியாக கையாள்கிறார். ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களும் பட்லர் திறமையை பார்த்து, கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆபத்தில் கை கொடுத்தார்

ஆபத்தில் கை கொடுத்தார்

பட்லர் இந்த தொடரில் மொத்தம் 275 ரன்கள் எடுத்தார். கடைசி ஒருநாள் போட்டியில் 206 ரன்களை விரட்டிய இங்கிலாந்து 50 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, பட்லர் சதம் விளாசி அணியை வெற்றிபெறச் செய்தார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய பட்லர் சுமார் 600 ரன்களை குவித்தார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

அதேநேரம் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், மொத்தமே 36 ரன்கள்தான் எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் ஒரு போட்டியில் 15 ரன்கள் எடுத்ததுதான் என்பது குறிப்பிடத் தக்கது. அதேநேரம், தோனி, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட் செய்ததோடு, விக்கெட் கீப்பிங்கிலும் ஜொலித்தார். கேப்டனாகவும் பரிணமித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். அனைத்து துறைகளிலும் பெஸ்ட்டாக விளங்குகிறார் தோனி. எனவே நெட்டிசன்கள், பெயின் கூறியதை கலாய்த்து வருகிறார்கள்.

Story first published: Tuesday, June 26, 2018, 10:56 [IST]
Other articles published on Jun 26, 2018
English summary
For long MS Dhoni has been rated as the best wicketkeeper-batsman in white ball cricket but Australia captain Tim Paine is of the opinion that England’s Jos Buttler has surged ahead of the former Indian captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X