Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவை மட்டுமில்லீங்க... தோனியோட இதயத்தையும் வெற்றி கொண்டிருக்கேன்..பட்லர் உற்சாகம்

அபுதாபி : நேற்றைய சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து 70 ரன்களை அடித்து அதிரடி காட்டி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளார் ஜோஸ் பட்லர்.

இந்நிலையில், போட்டியை அடுத்து வெற்றியை கொண்டாடும்வகையில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் சிஎஸ்கே ஜெர்சியுடன் அவர் போஸ் கொடுத்துள்ளார்.

125 ரன்களை மட்டும் எடுத்த சிஎஸ்கே

125 ரன்களை மட்டும் எடுத்த சிஎஸ்கே

ஐபிஎல்லின் 37வது போட்டி அபுதாபியில் நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சிஎஸ்கே 125 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ராஜஸ்தான் அணி வெற்றி

ராஜஸ்தான் அணி வெற்றி

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சற்றே தடுமாறினாலும், 5வதாக களமிறங்கிய அந்த அணியின் ஜோஸ் பட்லர், சிறப்பாக விளையாடி 70 ரன்களை அதிரடியாக அடித்து அணியை வெற்றி பெற செய்துள்ளார். இதையடுத்து அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வெற்றி கொண்டுள்ளது.

5வது இடத்திற்கு முன்னேற்றம்

5வது இடத்திற்கு முன்னேற்றம்

போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர், தன்னுடைய அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறவும் காரணமாக அமைந்துள்ளார். இதன்மூலம் பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி பெற அந்த அணிக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெர்சியுடன் போஸ் கொடுத்த பட்லர்

ஜெர்சியுடன் போஸ் கொடுத்த பட்லர்

இந்நிலையில், போட்டியின் வெற்றியை அடுத்து சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் சிஎஸ்கே ஜெர்சியுடன் ஜோஸ் பட்லர் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை ஐபிஎல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. எப்போதுமே எதிரணி வீரர்களாக இருந்தாலும் தன்னுடைய ஆலோசனைகளையும் நம்பிக்கையையும் அளிப்பவர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 20, 2020, 15:32 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+