Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 6 பந்துகள்.. பலனிக்காமல் போன பொல்லார்ட்-ன் மேஜிக்.. ராஜஸ்தான் அணியிடம் வீழ்ந்த மும்பை அணி!

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.

அடித்து நொறுக்கிய பட்லர்

அடித்து நொறுக்கிய பட்லர்

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர், வான வேடிக்கை காட்டினார். மொத்தமாக 68 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர் என 100 ரன்களை விளாசினார். நடப்பு ஐபிஎல் தொடரில் சதமடித்த முதல் வீரர் பட்லர் தான் ஆகும். இதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 30 ரன்களும், ஹெட்மெயர் 35 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில் 193 ரன்களை சேர்த்தது.

 தொடக்கமே பின்னடைவு

தொடக்கமே பின்னடைவு

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான ரோகித் சர்மா 10 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். முதல்விக்கெட்டிற்கு வந்த அன்மோல் ப்ரீத் சிங் 5 ரன்களை மட்டுமே எடுத்தார். எனினும் மிடில் ஆர்டரில் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது.

 மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப்

மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப்

இஷான் கிஷான் - திலக் வர்மா ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் 40 - 2 என்று இருந்த ஸ்கோரை 121 என கொண்டுச்சென்றனர். எனினும் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இஷான் கிஷான் 54 ரன்களும், திலக் வர்மா 61 ரன்களையும் எடுத்து அவுட்டாகினர். நட்சத்திர வீரர் டிம் டேவிட் 1 ரன்னுக்கு வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

பொல்லார்ட் மேஜிக்

பொல்லார்ட் மேஜிக்

கடைசியில் ஒட்டுமொத்த பொறுப்பும் கெயீரன் பொல்லார்ட் மீது வந்தது. ஆனால் கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. வழக்கமான பொல்லார்ட்-ன் மேஜிக் இந்த முறை பழிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த தொடரில் மும்பை அணிக்கு இது 2வது தோல்வியாகும்.

Story first published: Saturday, April 2, 2022, 19:58 [IST]
Other articles published on Apr 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+