Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் அதிக ரன் குவித்த வீரர்.. உலக சாதனை படைத்த இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்

லண்டன்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்டின் சாதனையை முறியடித்து அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடரில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் பட்லர், வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்தார். இப்போட்டிக்கு முன்பு பொல்லார்டின் சாதனையை முறியடிக்க பட்லருக்கு 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பட்லர், அதிரடியாக விளையாடி வெறும் 20 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், தன் அணியை 69 பந்துகளிலேயே வெற்றி பெறச் செய்தார் .

Jos Buttler surpasses Kieron Pollard to become all-time most T20 run scorer in the world

இதன் மூலம், தனது 522வது டி20 போட்டியில் விளையாடிய பட்லர், ஒட்டுமொத்தமாக 14,833 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். இதில் 9 சதங்களும், 106 அரைசதங்களும் அடங்கும். இதற்கு முன்பு முதல் இடத்தில் இருந்த கீரன் பொல்லார்ட் 746 போட்டிகளில் 14,803 ரன்களுடன் தற்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் 14,562 ரன்கள் எடுத்து 3வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 14,449 ரன்களுடன் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 14,284 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 430 போட்டிகளில் 14,218 ரன்களுடன் 6வது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்ஸ் 7வது இடத்திலும், பாகிஸ்தானின் சோயப் மாலிக் 8வது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் 9வது இடத்திலும் உள்ளனர்.

WTC புள்ளிப்பட்டியல்.. கடைசி இடத்தில் இருந்து முன்னேறிய பாகிஸ்தான்.. இந்தியா எந்த இடம்?

WTC புள்ளிப்பட்டியல்.. கடைசி இடத்தில் இருந்து முன்னேறிய பாகிஸ்தான்.. இந்தியா எந்த இடம்?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 472 போட்டிகளில் 12,531 ரன்களுடன் 10வது இடத்தில் உள்ளார். ஜோஸ் பட்லரின் இந்த அபார சாதனை உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 'தி ஹண்ட்ரட் 2026' தொடரில் அவர் 6 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 277 ரன்கள் குவித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார்.

பாகிஸ்தான் சாதனை வெற்றி.. 49 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீசை போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வீழ்த்தியது

Also Read

பாகிஸ்தான் சாதனை வெற்றி.. 49 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீசை போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வீழ்த்தியது
Story first published: Thursday, August 6, 2026, 9:22 [IST]
Other articles published on Aug 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+