Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 சிக்ஸ், 7 பவுண்டரி.. 43 பந்தில் மிரட்டல் சதம் விளாசிய ஜோஷ் இங்லிஸ்.. பாவம் ஸ்காட்லாந்து பவுலர்கள்!

எடின்பர்க்: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் 43 பந்துகளில் சதம் விளாசி சம்பவம் செய்துள்ளார். சிறப்பாக ஆடிய ஜோஷ் இங்லிஸ் 49 பந்துகளில் 7 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 103 ரன்கள் அசத்தியுள்ளார்.

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

australia scotland josh inglis

இதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் - மெக்கர்க் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கடந்த போட்டியில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்த டிராவிஸ் ஹெட், இந்த போட்டியில் முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட்டில் வெளியேறினார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான மெக்கர்க் 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேற, ஜோஷ் இங்லிஸ் - கேமரூன் க்ரீன் கூட்டணி இணைந்தது.

கேமரூன் க்ரீன் நிதானமாக விளையாட, மறுமுனையில் இருந்த ஜோஷ் இங்லிஸ் அதிரடியில் பொளந்து கட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாச, 20 பந்துகளில் ஜோஷ் இங்லிஸ் அரைசதத்தை எட்டினார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரும் 10 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அதன்பின்னரும் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார் ஜோஷ் இங்லிஸ்.

தொடர்ந்து கேமரூன் க்ரீன் 29 பந்துகளில் 36 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவரும் அதிரடியாக ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் எகிற தொடங்கினார். சிறப்பாக ஆடிய ஜோஷ் இங்லிஸ் 43 பந்துகளில் 7 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட சதத்தை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜோஷ் இங்லிஸ் அடிக்கும் 2வது சதம் இதுவாகும்.

சிறப்பாக ஆடிய அவர் 103 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. மேலும் இந்த சதத்தை விளாசியதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை ஜோஷ் இங்லிஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 47 பந்துகளில் அடித்த சதமே சாதனையாக இருந்தது.

ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியின் ஜோஷ் இங்லிஸ் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தியிருந்தார். அடுத்த சில மாதங்களிலேயே 2வது சதத்தை விளாசியதன் மூலமாக ஆஸ்திரேலியா அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக ஜோஷ் இங்லிஸ் மாறியுள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் அவர் நல்ல தொகைக்கு வாங்கப்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, September 6, 2024, 21:19 [IST]
Other articles published on Sep 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+