
குட்டி கோலி
சரியாக 25 வயதை எட்டிய நிலையில், கேஎல் ராகுலால் முடியாதது ஒன்றுமில்லை என்று கிரிக்கெட் உலகம் கணித்தது. அதற்கேற்ப ஐபிஎல் தொடரில் 14 பந்துகளில் அரைசதமும் அடித்ததோடு மட்டுமல்லாமல், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் பவுண்டரியை அடிக்க 108 பந்துகள் எடுத்துகொண்டார். இதனால் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாகவே கேஎல் ராகுல் பார்க்கப்பட்டார். இவ்வளவு தமிழ்நாடு ரசிகர்களும், கேஎல் ராகுலை குட்டி கோலி என்று அழைத்து வந்தனர்.

6 ஆண்டுகள்
பேடில் வீசப்படும் பந்துகளை சிக்சர் அடிக்க வேண்டும், நான்காவது ஸ்டம்ப் லைனில் வரும் பந்துகள் சரியாக தவிர்க்கவும் வேண்டும் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப கேஎல் ராகுல் பரிபூரண பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். அங்கிருந்து அடுத்த 6 ஆண்டுகளில் உச்சத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இடத்தை பறிகொடுத்து அணியில் இருந்து வெளியேறினார்.

கேஎல் ராகுல் கம்பேக்
ஆனால் கேஎல் ராகுல் விட்டுவிடவில்லை. 2021ல் மீண்டும் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கேஎல் ராகுல், லார்ட்ஸ் மற்றும் சென்சுரியனில் சதம் விளாசி தனது இடத்தை நிரந்தரமாக்கினார். சரியாக விராட் கோலி கேப்டன்ஷிப்பில் இருந்து விலக, ரோகித் சர்மா காயத்தால் ஓய்வில் இருக்க வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனானார் கேஎல் ராகுல்.

கேப்டன் கேஎல் ராகுல்
ஆனால் கேப்டனாக போது கேஎல் ராகுலின் பேட்டிங் சராசரி 17.12ஆக மட்டுமே இருந்தது. 8 இன்னிங்ஸ்களில் ஒரே ஒருமுறை மட்டுமே அரைசதம் விளாசியுள்ளார். இந்த சூழலில் தான் இளம் வீரரான சுப்மன் கில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சுப்மன் கில்லின் ஃபார்மை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரசிகர்களும், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் உத்தரவிடாத குறையாக அறிவுறுத்தி வருகிறார்கள்.

அக்னி பரீட்சை
ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியதால், கேஎல் ராகுலின் இடம் நிச்சயமான ஒன்றாக இருக்கிறது. ஒருவேளை கேஎல் ராகுல் முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்படாத பட்சத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் நாளை நடக்க உள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி கேஎல் ராகுலுக்கு அக்னி பரிட்சையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











