Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

''டோணி வீட்டுல கல் அடிச்சவங்க மோசமான பயலுகளாகத்தான் இருக்கனும்....''

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் வீட்டு ஜன்னல் கண்ணாடியை கல்லை வீசி உடைத்தது யார் என்று தெரிந்தாக வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் வீடு ராஞ்சியில் இருக்கிறது. நேற்று முன்தினம் அவரது வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்நேரம் வீட்டில் டோணியின் குடும்பத்தார் இல்லை. டோணியின் வீடு மீது இத்துடன் 5வது முறையாக கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் டோணியின் வீட்டு மீது கல்லை வீசி ஜன்னல் கண்ணாடியை உடைத்தது யார் என்று தெரிந்தாக வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

JSCA wants to know who broke Dhoni's house window panes

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

விளையாட்டு பிரியர்கள் மற்றும் ராஞ்சி மக்கள் நல்லவர்கள். ஆனால் அதிலும் சிலர் இருக்கின்றனர். இது சில மோசமானவர்களின் செயலாக இருக்க வேண்டும் என்றார்.

டோணி வீடு மீதான கல்வீச்சு சம்பவம் குறித்து ராஞ்சி எஸ்.பி. சகேத் குமார் விசராணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவம் பற்றி டோணி குடும்பத்தார் போலீசில் இதுவரை புகார் கொடுக்கவில்லை.

Story first published: Friday, October 25, 2013, 12:26 [IST]
Other articles published on Oct 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+