Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி தொடங்கிய கோஹ்லி வரை.. எல்லோரையும் உருவாக்கிய ஒரு போட்டி.. கபிலின் 1983 உலகக் கோப்பை!

Recommended Video

தோனி தொடங்கிய கோஹ்லி வரை..எல்லோரையும் உருவாக்கிய ஒரு போட்டி..வீடியோ

சென்னை: சரியாக 35 வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான் இந்தியா தன்னுடைய முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.

கபில் தேவ் தலைமையில் 1983, ஜூன் 25 நடந்த அந்த போட்டியை யாராலும் மறக்க முடியாது. 70கிட்களின் கனவு ஆட்டம். ஜென் இசட்டிற்கு தோனி வான்கடே மைதானத்தில் சிக்ஸ் அடித்தது எப்படியோ அப்படித்தான் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் அடித்ததும்.

அந்த 60 ஓவர் ஆட்டம், இன்னொரு பல ஜென்மங்களுக்கு கிரிக்கெட் உலகில் பேசப்படும். கோஹ்லி இன்னொரு கோப்பை வாங்கி கொடுத்தாலும், அந்த கபில் தேவ் டீம் கொஞ்சம் ஸ்பெஷல்தான் பாஸ்.

இந்தியா

இந்தியா

இதில் மேற்கிந்திய தீவுகள் அணிதான் டாஸ் வென்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பந்து வீச முடிவெடுத்தது. அப்போது 60 ஓவர் போட்டியாக இருந்தது. இந்தியா முதலில் இறங்கி, 54.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. மொத்தமாக 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சூப்பர்

சூப்பர்

அதன் பின் இறங்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அந்த தொடரில் மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங் ஆர்டர் புயலை கிளப்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இந்திய அணியின் பவுலிங் ஆர்டர் அல்லு சில்லு தெறிக்க விட்டுக் கொண்டு இருந்தது. அந்த போட்டியிலும் இந்த அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது.

அவுட்டானது

அவுட்டானது

அதன்பின் இறங்கிய மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க ஆரம்பித்தனர். விவிலியன் ரிச்சர்ட்ஸ் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். டுஜன் 25 ரன்கள் எடுத்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி, 25 ஓவர் பிடித்து 140 மட்டுமே எடுத்தது. அமர்நாத், மதன் லால் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

செம பவுலிங்

செம பவுலிங்

அந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க இந்தியா பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. இறுதி போட்டியில் மொத்தம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போது வீசப்பட்ட ஒவ்வொரு பந்துகளும் இந்தியர்களின் மனதில் ஆழமாக கிரிக்கெட் ஆசையை விதைத்தது. அப்போது கபில் தேவ் கோப்பையை தூக்கி நின்றதுதான் அடுத்தடுத்த வரலாறுக்கும் அடிபோட்டது.

வரலாறு

வரலாறு

அப்போது கபில் தேவ் கோப்பை வென்ற போது இந்தியா கிரிக்கெட் அடிமையானது, சச்சின் வந்த பின் கிரிக்கெட் பைத்தியம் பிடிக்க தொடங்கியது. முதலில் கபில்தேவ் காலத்தில் எளிதாக தோல்வி அடைந்தோம், கங்குலி காலத்தில் போராடி தோல்வி அடைத்தோம், தோனி காலத்தில் போராடி கடைசி ஓவரில் வெற்றிபெற்றோம், இதோ இப்போது கோஹ்லி எல்லோரையும் அடித்து ஓடவிட்டுக் கொண்டு இருக்கிறார். கபிலுக்கு பின் தோனி ஒரு கோப்பை வாங்கி கொடுத்துவிட்டார். இன்னொரு கோப்பை கேலரியில் கோஹ்லிக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு வரலாறு அடுத்து வருடம் படைக்கப்படுமா?.. காலம் பதில் சொல்லும்.

Story first published: Monday, June 25, 2018, 20:14 [IST]
Other articles published on Jun 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+