Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விரைவில் ஜூனியர் மாலிக் வருவார்: சொல்கிறார் சானியா மிர்ஸாவின் கணவர்

இஸ்லாமாபாத்: விரைவில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தாயாவார் என்று அவரது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்டினா ஹிங்கிஸுடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். அண்மையில் தொடர்ந்து 3 கோப்பைகளை வென்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடி டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சானியாவின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ஜூனியர் மாலிக்

ஜூனியர் மாலிக் எப்பொழுது வருவார் என்று ரசிகர் ஒருவர் சோயப் மாலிக்கிடம் ட்விட்டரில் கேட்டிருந்தார். அதற்கு அவர் கூறுகையில், விரைவில் இன்ஷா அல்லாஹ் என்று தெரிவித்துள்ளார்.

டான்ஸ்

சானியாவின் வெற்றியை நீங்கள் எவ்வாறு கொண்டாடினீர்கள் என்று ரசிகர் கேட்டதற்கு மாலிக், நான் அவருடன் இல்லாததால் போன் மூலம் பேசிக் கொண்டாடினோம். மேலும் நிறைய டான்ஸ் ஆடினோம் என்றார்.

கேகேஆர்

ஐபிஎல் 8வது சீசனில் ஆடி வரும் அணிகளில் உங்களுக்கு பிடித்த அணி எது என்று ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு மாலிக், ஷாருக்கானின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

சானியா மேனேஜர்

நீங்கள் கிரிக்கெட் வீரர் ஆகாவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று சோயப் மாலிக்கிடம் கேட்கப்பட்டது. சானியாவின் மேனேஜர் ஆகியிருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டோணி

உங்களுக்கு பிடித்த இந்திய அல்லது பாகிஸ்தானியர் அல்லாத கிரிக்கெட் வீரர் யார் என ஒருவர் கேட்டதற்கு எம்.எஸ். டோணி, டேல் ஸ்டெய்ன் என்று பதில் அளித்துள்ளார் மாலிக்.

கரீனா கபூர்

உங்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகை யார் என்று ஒரு ரசிகர் மாலிக்கிடம் கேட்டார். அதற்கு அவர் கரீனா கபூர் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 17, 2015, 11:12 [IST]
Other articles published on Apr 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+