கனடா ஓபன்.. கலக்கல் வெற்றியைச் சுவைத்த ஜ்வாலா, அஸ்வினி பொன்னப்பா
டோரண்டோ: கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முன்னணி ஜோடியான ஈப்ஜி முஸ்கன்ஸ், செலீனா பியக் ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் ஜ்வாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
டச்சு ஜோடியான முஸ்கன்ஸ் - பியக் ஜோடியை 21-19, 21-16 என்ர நேர் செட் கணக்கில் இந்திய ஜோடி அடித்து நொறுக்கி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. அரை மணி நேரத்திலேயே போட்டி முடிவுக்கு வந்தது.
முதல் செட் மட்டுமே இந்திய ஜோடிக்கு சற்று சவாலாக இருந்தது. ஆனால் 2வது செட்டில் எளிதாக வென்றது இந்திய ஜோடி.

2வது செட்டில் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது. சடசடவென புள்ளிகளைக் குவித்து வந்தனர் ஜ்வாலாவும், அஸ்வினியும். குறிப்பாக ஜ்வாலாவின் ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது.
ஜ்வாலாவும், அஸ்வினியும் கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஜ்வாலாவும், அஸ்வினியும் இணைந்து ஆடி வருகின்றனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து வென்றுள்ள 4வது சாம்பியன் பட்டமாகும் இது.


Click it and Unblock the Notifications