Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுலுக்கு பேட்டிங்கில் சிக்கல் அல்ல.. இது வேறு பிரச்சினை.. அறிவுரை தந்த ஸ்ரீகாந்த்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் கடந்த 10 இன்னிங்ஸில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 23 ரன்கள் அடித்துள்ளார்.

கே எல் ராகுலை அணியை விட்டு நீக்க வேண்டும் என பல வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் கே எல் ராகுல் அடித்த 7 சதங்களில் ஆறு சதம் இந்தியாவுக்கு வெளியே விளையாடியது.

குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ,தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை சதம் அடித்திருக்கிறார்.

மிகவும் பிடிக்கும்

மிகவும் பிடிக்கும்

எனினும் 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ராகுல் 33 என்ற அளவில் சராசரி வைத்திருக்கிறார். இது அவருடைய திறமைக்கு நியாயம் இல்லை என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய முன்னாள் தொடக்க வீரரும் மற்றும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் ராகுல் திறமை மீது எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. அவர் விளையாடும் ஷாட்டுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிரேக் எடுங்க

பிரேக் எடுங்க

நான் ராகுலை எப்போதும் ரோல்ஸ் ராய்ஸ் ராகுல் என்றுதான் அழைப்பேன். ஆனால் தற்சமயத்தில் அவருடைய பழைய ஆட்டத்தை களத்தில் காண முடியவில்லை. நான் மட்டும் இப்போது தேர்வு குழு தலைவராக இருந்தால் அவருடன் நேரில் பேசி இருப்பேன். ராகுலை கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்க சொல்லி இருப்பேன்.கே எல் ராகுல் மீது எனக்கு பெரிய அளவில் மரியாதை இருக்கிறது.

மனதளவில் சிக்கல்

மனதளவில் சிக்கல்

எனினும் இப்போது சுப்மன்கில்லை தொடக்க வீரராக பயன்படுத்த வேண்டும். கில் அவருடைய வாழ்க்கையில் இப்போது பார்மின் உச்சத்தில் இருக்கிறார். இதனை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ராகுல் பேட்டிங்கில் என்ன பிரச்சனை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் அவரின் பேட்டிங்கில் சிக்கல் இருப்பது போல் தெரியவில்லை.

 அறிவுரை

அறிவுரை

ராகுல் மனதளவில் தான் பிரச்சனையில் இருக்கிறது. ராகுல் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொண்டு அவருடைய மனதில் என்ன பிரச்சனை , சிக்கல் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தீர்க்க வேண்டும். ராகுல் அப்படி ஓய்வெடுத்துக் கொண்டால் அவர் மீண்டும் கிரிக்கெட் வரும்போது அதிரடியாக விளையாடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 22, 2023, 23:27 [IST]
Other articles published on Feb 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+