Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் சங்கர்லாம் ஒரு சர்வதேச வீரரா? வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த்.. தேர்வுக்குழு மீதும் பாய்ச்சல்

சென்னை: தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்லாம் ஒரு இண்டர்நேஷனல் பிளயேரா என்று கேட்டு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்ரீகாந்த், தனது மகனுடன் ஐபிஎல் போட்டிகள் குறித்து யூடியூப் சேனலில் பேசினார். இதில், ஐபிஎல் போட்டிகளை வைத்து விரர்களை தேர்வு செய்வது சரியா என்ற விவாதம் எழுந்தது.

இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், ஐபிஎல் போட்டிகள் சவால்கள் நிறைந்த தொடராக இருந்தாலும், அதில் சிறப்பாக விளையாடியதற்காக இந்திய அணியில் வாய்ப்பு வழங்க கூடாது என்று கூறினார்.

சொதப்பி விடுகின்றனர்

சொதப்பி விடுகின்றனர்

ரஞ்சி கிரிக்கெட், விஜய் ஹசாரே போன்ற தொடரை வைத்து தான் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும், அதோடு வேண்டுமானால், ஐபிஎல் போட்டியை சேர்த்து கொள்ளலாம். அதுவும் ஒரு சீசன் நன்றாக விளையாடினால் உடனே இப்போதைய தேர்வுக்குழுவினர் வாய்ப்பு வழங்கி விடுகின்றனர். அந்த வீரரும் சர்வதேச போட்டியில் நெருக்கடி தாங்காமல் சொதப்பி விடுகிறார்.

எப்படி தேர்வு செய்யனும்?

எப்படி தேர்வு செய்யனும்?

இதனை தவிர்க்க, குறிப்பிட்ட வீரர்கள் உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க வேண்டும். தொடர்ந்து 2 ஆண்டுகள் நன்றாக விளையாடினால், அதன் பின்னர் தான் அணியில் சேர்க்க வேண்டும். ஆனால் இப்போது ஒரு ஐபிஎல் தொடரில் விளையாடினாலே இந்த ஊடகங்கள் அந்த வீரருக்கு ஏன் வாய்ப்பு இந்திய அணியில் தரவில்லை என்று கேள்வி கேட்கின்றனர்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

ஊடகங்களுக்கு பயந்தே தேர்வுக்குழு சில முடிவுகளை எடுக்கின்றனர். இப்படி தான் விஜய் சங்கரை இந்திய அணியில் எடுத்தார்கள். அவரால் நிலைத்து ஆட முடிந்ததா, விஜய் சங்கர் எல்லாம் ஒரு இண்டர்நேஷனல் பிளேயரா. அவரை பார்த்தாலே தெரிய வேண்டாம். அவரால் சர்வதேச போட்டியில் இருக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியுமா? ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் என்று ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்தார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள விஜய் சங்கருக்கு தான் முதலில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர் தொடர்ந்து சொதப்பினார். 4 போட்டிகளில் விளையாடி 19 ரன்கள் தான் நடப்பு சீசனில் விஜய் சங்கர் அடித்துள்ளார்.இதனால் குஜராத் அணி அவரை பெஞ்சில் உட்கார வைத்தது. இதனால் தான் ஸ்ரீகாந்த் இவ்வாறு கடுமையாக விமர்சனத்தை வைத்துள்ளார்.

Story first published: Friday, May 6, 2022, 23:53 [IST]
Other articles published on May 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+