Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது உபி மாடல் ! கழிவறையில் கபடி வீரர்களுக்கு சாப்பாடு.. ஷிகர் தவான் கண்டனம்.. அதிர்ச்சி வீடியோ

லக்னோ : உத்திரபிரதேசம் மாநிலத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கு நமது நாட்டில் வழங்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் மற்ற விளையாட்டு போட்டிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறது.

அதிக நிதி

அதிக நிதி

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு தான் மத்திய அரசு விளையாட்டு துறைக்காக 154 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு வெறும் 33 கோடி ரூபாய் தான் மத்திய அரசு அளித்துள்ளது. பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் ஹரியானாவுக்கு வெறும் 36 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

கழிவறையில் உணவு

கழிவறையில் உணவு

ஆனால் இந்த பணத்தை வைத்து வீரர்களுக்கு சாப்பாடு தர கூட வழியில்லாத நிலையில் இருக்கிறது உத்திரபிரதேச அரசு. உத்தரபிரதேசத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்று உள்ளது. இதில் பங்கு பெற்ற வீரர்களுக்கு போட்டி ஏற்பட்டாளர்கள் கழிவறையில் உணவு பரிமாறி இருக்கின்றனர்.

ரசிகர்கள் கேள்வி

வேறு வழி இல்லாத வீரர்களும் உணவை வாங்கி சென்று இருக்கின்றனர். சாப்பிடும் உணவை கழிவறையில் எல்லாம் வைத்து பரிமாறுவார்களா என்று ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படி நடந்து கொண்ட விளையாட்டு அமைப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

ஷிகர் தவான் கண்டனம்

ஷிகர் தவான் கண்டனம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், கழிவறையில் உணவு வழங்கும் காட்சியை பார்க்கும் போது மனசு வலிக்கிறது. உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவான் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் சாதிய ரீதியில் வீரர்கள் அவமானப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

Story first published: Thursday, September 22, 2022, 18:27 [IST]
Other articles published on Sep 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+