ஐபிஎல் 2020 ஹீரோ ரபடா.. தென்னாப்பிரிக்கா -இங்கிலாந்து தொடரில் நீக்கம்... இலங்கை தொடரில் இணைவாரா?
கேப் டவுன் :தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் விளையாடிய டி20 தொடரில் 3க்கு 0 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய 3வது போட்டியில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் அவுட்டாகாமல் எடுத்த 99 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்ததாக வரும் 4ம் தேதி துவங்கவுள்ள ஒருநாள் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடா நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அபார வெற்றி
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 3க்கு 0 என்ற கணக்கில் தொடரை வெற்றி கொண்டுள்ளது.

டேவிட் மலன் அபாரம்
நேற்று நடைபெற்ற 3வது மற்றும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் டேவிட் மலன் அவுட் ஆகாமல் அடித்த 99 ரன்கள் அந்த அணியின் சிறப்பான வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது.

காகிசோ ரபடா நீக்கம்
இந்நிலையில் இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் காகிசோ ரபடா ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது. ரபடா 3 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

காகிசோ பங்கேற்பார் என நம்பிக்கை
இதையடுத்து வரும் 26ம் தேதி துவங்கவுள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காகிசோ விளையாடும்வகையில் அவர் பயோ பபளிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தனது பிட்னசை வெளிப்படுத்தி இலங்கை தொடரில் இணைவார் என்றும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வீரர்களுக்கு ஓய்வு
இதேபோல, டி20 தொடரில் இணைந்த இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் குர்ரான் ஆகியோருக்கு வரும் 4ம் தேதி கேப் டவுனில் துவங்கவுள்ள ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இங்கலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications