Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்தான் சிராஜ் முகமது.. சிலர் இந்த போட்டோவை மறக்க கூடாது.. முகமது கைப் செய்த டிவிட்.. வைரல்!

சிட்னி: இந்திய அணியின் வீரர் முகமது சிராஜின் புகைப்படத்தை பகிர்ந்து முகமது கைப் பாராட்டி உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

மழைக்கு இடையே இன்று முதல்நாள் ஆட்டம் நடைபெற்றது. மார்னஸ், புக்கோவஸ்கி இருவரும் இதில் அரைசதம் அடித்துள்ளனர். இன்று இந்திய அணியின் பவுலர் சிராஜ் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியாவின் ஒரு விக்கெட் எடுத்தார்.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்தார். இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாகவே இருந்தது. முகமது சிராஜ் தனது முதல் போட்டியில் 5 விக்கெட் எடுத்தார். இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்று மாற்றி மாற்றி பவுலிங் செய்தார்.

சிராஜ் பவுலிங்

சிராஜ் பவுலிங்

இன்றைக்கு நடந்த போட்டியிலும் சிராஜ் செய்தார். தொடக்கத்திலேயே அதிக அளவில் பவுன்சர் வீசி ஆதிக்கம் செலுத்தினார். முக்கியமாக ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் வர்னரை 5 ரன்களுக்கு அவுட் செய்து ஆதிக்கம் செலுத்தினார். இந்த நிலையில் சிராஜின் வீடியோ ஒன்று இன்று இணையம் முழுக்க வைரலானது.

வைரல்

இந்திய தேசிய கீதம் பாடும் போது சிராஜ் ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ ஆகும் இது. இந்திய அணிக்காக ஆடுகிறோம் என்று பெருமிதத்தில் சிராஜ் கண்ணீர் விட்ட வீடியோ ஆகும் இது. இந்திய தேசிய கீதம் மீதான சிராஜின் மரியாதை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

பாராட்டு

பாராட்டு

இந்த நிலையில் சிராஜின் புகைப்படத்தை பகிர்ந்து முன்னாள் வீரர் முகமது கைப் டிவிட் செய்துள்ளார். அதில், இந்த புகைப்படத்தை சிலர் நினைவில் வைத்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவர்தான் சிராஜ் முகமது, இந்திய தேசிய கீதம் மீதான அவரின் மதிப்பு இதுதான், என்று கைப் டிவிட் செய்துள்ளார். தேசிய கீதத்தை சிராஜ் அந்த அளவிற்கு மதிக்கிறார் என்று கைப் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, January 7, 2021, 16:24 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+