
அழகான மைதானம்
நாட்டிலுள்ள அனைத்து கிரிக்கெட் மைதானங்களும் படும் மோசமான அளவில் இருக்கிறது. தற்போது தான் ஒவ்வொரு மைதானத்தையும் பிசிசிஐ மாற்றி வருகிறது.சமீபத்தில் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் என உலகிலே பெரிய மைதானத்தை அமைத்தார்கள். பெங்களூரு ,டெல்லி போன்ற மைதானங்கள் இன்னும் பழைய மாதிரியாக ரசிகர்களுக்கு மோசமான அனுபவத்தை கொடுக்கும் நிலையில் உள்ளது.

புதுப் பொலிவு
சென்னை எம் சி ஏ கிரிக்கெட் மைதானம் புதுப்பொலிவுடன் 2013 ஆம் ஆண்டு முதல் விளங்கி வருகிறது. தற்போது மைதானத்தில் இருந்த பழைய மாடம் ஒன்று இடிக்க அப்போதைய அரசு அனுமதி அளிக்கவில்லை. ஏனெனில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கட்டிடம் புராதான சின்னம் என்று முத்திரை வழங்கப்பட்டதால் அதனை மாற்ற முடியாமல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தவித்து வந்தது.இந்த நிலை அதற்கான அனுமதி கிடைத்த நிலையில் தற்போது அந்த கட்டிடத்தை இடித்து பிரம்மாண்டமாக புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதி பெயர்
இதன் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிட்டத்தட்ட 50,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி ஏற்பட்டுள்ளது. இந்த புதிய பார்வையாளர்கள் மாடத்திற்கு கலைஞர் கருணாநிதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் என தமிழகத்தின் மாபெரும் தலைவரின் பெயர் உள்ளது.இந்த நிலையில் தற்போது புதிய மாடத்திற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தோனியின் ஓவியங்கள்
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெளித்தோற்றத்தில் மகேந்திர சிங் தோனியின் பிரம்மாண்ட கலர் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அண்ணா கலைஞர் தோனி என்ன மூன்று ஜாம்பவான்கள் சங்கமிக்கும் இடமாக சேப்பாக்கம் விளங்குகிறது. மைதானத்தின் புதிய மாடத்தை வரும் 17ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினும் தோனியும் தொடங்கி வைக்கிறார்கள். இதை தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் இடையான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது .


Click it and Unblock the Notifications











