ஐபிஎல்: யுவராஜ் இருந்த எந்த அணியாவது ஜெயிச்சதா?: கேஆர்கே
மும்பை: யுவராஜ் சிங் ஓய்வு பெற வேண்டும் என பாலிவுட் நடிகர் என்று கூறிக் கொள்ளும் கமால் ஆர் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர், விமர்சகர் என்று கூறிக் கொள்ளும் கமால் ஆர் கான் அதாவது ஷாருக்கானுக்கு போட்டியாக தன்னை கேஆர்கே என்று அழைக்கும் அவர் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை தாக்கி ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
யுவராஜ் சிங்
ஐபிஎல்லில் யுவராஜ் சிங் இதுவரை 4 அணிகளை மாற்றிவிட்டார். அவர் இடம்பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு கூட இதுவரை தேர்வானது இல்லை.
விஜய் மல்லையா
விஜய் மல்லையா அதிக விலை கொடுத்து யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுத்தார். அந்த தவறுக்காக அவர் ஐபிஎல் சீசன் முழுவதும் தினந்தோறும் தன்னைத் தானே அறைந்து கொண்டார்.
முட்டாள்கள்
டெல்லி அணியின் முட்டாள் உரிமையாளர்கள் அதிக விலை கொடுத்து யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுத்ததால் அவர் இந்திய அணியிலும் இடம்பெற வேண்டும் என்பது இல்லை.
ஓய்வு
சேவாக், கம்பீர், யுவராஜ், ஜாஹீர் உள்ளிட்ட வீரர்கள் பிறரை குறைகூறாமல், இந்தியாவுக்காக விளையாட காத்திருக்காமல் ஓய்வை அறிவிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications