For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

13 வருஷத்துக்கு முன்பு.. நான் பார்த்த கோலியா இது? - ஆச்சர்யத்தில் மிதக்கும் பாக்., முன்னாள் வீரர்

இஸ்லாமாபாத்: 13 வருடங்களுக்கு முன்பு கோலியை தான் பார்த்து வியந்த தருணத்தை பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பகிர்ந்துள்ளார்.

விராட் கோலி எனும் பெயர் 2008க்கு முன்பு வரை, இந்தியர்கள் எவருக்குமே தெரியாது. ஏன்.. பல கிரிக்கெட்டர்களுக்கு கூட தெரியாது.

ஆனால், 2008ம் ஆண்டு அண்டர்-19 உலகக் கோப்பையை வென்றுவந்த கேப்டனாக ஆங்கிலம் முதல் தமிழ் செய்தித்தாள்களின் முகப்பு பேஜை அலங்கரித்தார் கோலி. அப்போதெல்லாம், ஃபேஸ்புக், ட்விட்டர் பற்றி பலருக்கும் தெரியாது. ஒன்லி நியூஸ் பேப்பர்ஸ் தான்.

 ஆச்சர்யமடைந்தேன்

ஆச்சர்யமடைந்தேன்

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கோலி குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அதில், "2008ம் ஆண்டு தான் முதன் முதலாக ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. அப்போது நான் முதல் சீஸனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடினேன். விராட் கோலி, பெங்களூரு அணிக்கு விளையாடினார். அவரை முதன் முதலாக பார்த்த போதே நான் ஆச்சர்யமடைந்தேன்.

 இன்று ரோல் மாடல்

இன்று ரோல் மாடல்

அந்த இளம் வயதில் அவர் கிரிக்கெட் விளையாடிய விதத்தை பார்த்து பிரமித்து போனேன். இப்போது அவர் முற்றிலும் மாறிவிட்டார். தன்னைத் தானே செதுக்கிக் கொண்டார். இப்போது அவர் இளைஞர்களுக்கான ரோல் மாடலாகிவிட்டார். அந்த ஒரு இளம் வீரராக அவரை பார்த்த நான், இன்று அவர் பல வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன்.

 தனித்துவமானது

தனித்துவமானது

எம்.எஸ்.தோனிக்கு பிறகு விராட் கோலி தான் இந்தியாவின் சிறந்த கேப்டன். அவர் 70 சதங்கள் அடித்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 உலகக் கோப்பை விளையாடியுள்ளார். நிச்சயமாக, இந்தியா தோற்றது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதில் அவரது தவறு என்ன? ஐந்து ஆண்டுகளாக இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணியாக உள்ளது. இதுதான் அவரது சாதனை. அவரது கடமையை பாருங்கள்... அவரது கேப்டன்ஷிப் அற்புதமானது. இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒரு அற்புதமான வீரர், அவர் தன்னைத் தயாரித்துக் கொண்ட விதம் தனித்துவமானது.

 கேப்டன்சி குறை

கேப்டன்சி குறை

ஒருவேளை இந்தியா தோற்ற போட்டிகளில், அவருக்கு பதில் வேறொருவரை கேப்டனாக நியமித்துவிட்டால், இந்திய அணி ஐ.சி.சி தொடரில் வெற்றிப் பெற்றுவிடும் என்று யாரும் எந்த உத்தரவாதம் அளிக்க முடியாது. இது அதிர்ஷ்டம் தொடர்பான ஒன்று. விரல்களை நீட்டி குற்றம் சாட்டுவது மிக எளிது. குறிப்பாக கிரிக்கெட்டைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள், ஒரு Gully கிரிக்கெட் அணியைக் கூட வழிநடத்தாதவர்கள் இப்போது கோலி கேப்டன்சியை குறை கூறுகிறார்கள், கேப்டனை மாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள்" என்றும் அக்மல் கூறியிருக்கிறார்.

Story first published: Saturday, July 3, 2021, 22:09 [IST]
Other articles published on Jul 3, 2021
English summary
kamran akmal remembering virat kohli on ipl - அக்மல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+