Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசிங்கமா இருக்கு.. கேவலப்படுத்தாதீங்க ! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை வெளுத்து வாங்கிய அக்மல்

லாகூர் : உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் ஆப்கானிஸ்தானை சென்னையில் எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்ப்பு தெரிவித்தது .

இதற்கு காரணம் சென்னை ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சூழல் பதிச்சாளர்களை எதிர்கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் குறிப்பிட்டது.

Kamran akmal slams PCB for their request to change the venue for afganistan match

எனினும் இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கைக்கு அந்நாட்டு முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மைதானமும் ஆடுகளத்தின் சூழலும் இனி எந்த அணிக்குமே சிக்கலாக இருக்காது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கவே கூடாது.

இது போன்ற பேச்சு எல்லாம் இனி சர்வதேச கிரிக்கெட்டில் எடுபடாது. ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து ஆகிய நாடுகளை இந்திய அணி அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் நாங்கள் ஆப்கானிஸ்தான் அணியை சென்னையில் எதிர்கொள்ள மாற்றம் என்று கூறுவதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

உங்களுடைய கவனம் எல்லாம் கிரிக்கெட்டில் மட்டுமே இருக்க வேண்டும். இது போன்ற கேவலமான கோரிக்கையை எல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ள வேண்டாம் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. சர்வதேச கிரிக்கெட் தற்போது முன்பு மாதிரி இல்லை. வீரர்கள் தங்களுடைய செயல்பாடு நினைத்து பெருமைப்பட வேண்டும். ரசிகர்களும்,கிரிக்கெட் வாரியமும் என்ன நினைக்கிறது என்பது வீரர்களுக்கு தெரிய வேண்டும்.

இது போன்ற கேவலமான கோரிக்கையை வைத்து உங்கள் நாட்டு வீரர்களை நீங்களே கேவலப்படுத்தாதீர்கள் என்று கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான அணி இந்தியாவில் ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு ,சென்னை, கொல்கத்தா ஆகிய மைதானங்களில் விளையாடுகிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

Story first published: Wednesday, June 28, 2023, 23:40 [IST]
Other articles published on Jun 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+