“இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து”.. பாக். சீனியர் எச்சரிக்கை!
அகமதாபாத்: நியூசிலாந்து அணியுடனான டி20 போட்டியில் சுப்மன் கில் உட்கார வைக்கப்படவில்லை என்றால் இந்திய அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுவிடும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1 - 1 என சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
எப்படியாவது தொடரை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அணியும், தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நியூசிலாந்து அணியும் களமிறங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஓப்பனிங்கே சிக்கல்
இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு ஓப்பனிங்கே பிரச்சினையாக தான் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் அசத்திய சுப்மன் கில், டி20 போட்டிகளில் தடுமாறி வருகிறார். கடந்த 2 போட்டிகளிலும் 7 மற்றும் 11 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார். இதுவரை அவர் ஆடியுள்ள 5 போட்டிகளில் 76 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

கம்ரான் அக்மல் கருத்து
இந்நிலையில் சுப்மன் கில்லை நீக்கியே ஆக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சுப்மன் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்களில் சிறப்பாக இருந்தார். ஆனால் டி20யில் இன்னும் அவர் எதையுமே செய்யவில்லை. அவர் இன்னும் ஒரு போட்டியில் விளையாடி சொதப்பினாலும் கூட நம்பிக்கையை இழந்துவிடுவார்.

இந்திய அணிக்கு பாதிப்பு
மற்ற 2 வடிவங்களில் சிறப்பாக விளையாடி வரும் ஃபார்மும் பாதிப்படைந்துவிடும். இதுபோன்ற ஒரு வீரர் டி20 கிரிக்கெட்டில் ஆட வேண்டும் தான். ஆனால் அவருக்கு கடைசி போட்டியில் ஓய்வு கொடுத்து வைத்தால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பார், அடுத்த போட்டிகளிலாவது பழைய ஃபார்முடன் இருப்பார் என அக்மல் கூறியுள்ளார்.

பாண்ட்யா முடிவு
இதுஒருபுறம் இருக்க, 3வது போட்டியில் பிரித்வி ஷாவை சேர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகள் இருப்பதால், சுப்மன் கில் அதற்கு தயாராக வேண்டும். எனவே இந்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, வாய்ப்புக்காக காத்துள்ள பிரித்வி ஷா சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications