For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இவரு இன்னும் திருந்தல மாமா”.. பாகிஸ்தான் வீரர் கம்ரான் செய்த காமெடி.. கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்

பர்மிங்காம்: சில விஷயங்கள் காலத்தால் மாறாது என்பார்கள். அதற்கு உதாரணமாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலின் விக்கெட் கீப்பிங்கை சொல்லலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் முன்னாள் வீரர்களுக்கான வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் அவர் செய்த ஒரு செயல், ரசிகர்களை மீண்டும் 2010-களுக்கே அழைத்துச் சென்றுவிட்டது. அப்போதும், இப்போதும் ஒரே மாதிரியாக அவர் செய்த சொதப்பல்களை ஒப்பிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.

Kamran Akmal Trolled by Fans for Another Blunder at World Championship of Legends 2025

இங்கிலாந்தில் நடைபெறும் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரில், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக கம்ரான் அக்மல் களமிறங்கியபோது, ரசிகர்கள் அவர் சொதப்பலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களை ஏமாற்றவில்லை அக்மல்.

பழைய நினைவுகளை கிளறிய 'கோல்டன்' தருணம்

இங்கிலாந்து அணி 161 ரன்கள் இலக்கை துரத்தியபோது, ஆட்டத்தின் ஆறாவது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சோயிப் மாலிக் வீசினார். அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த இங்கிலாந்து வீரர் பில் மஸ்டர்ட், கிரீஸை விட்டு வெளியே வந்து பந்தை விளாச முயன்றார். ஆனால் பந்து அவரை ஏமாற்றிவிட்டு, விக்கெட் கீப்பர் கம்ரான் அகமலிடம் தஞ்சம் புகுந்தது.

மஸ்டர்ட் கிரீஸை விட்டு வெகுதூரம் வெளியே இருந்ததால், இது ஒரு சுலபமான ஸ்டம்பிங் வாய்ப்பாக அமைந்தது. ஆனால் அங்கேதான் அந்த சுவாரஸ்யமே நடந்தது. வந்த பந்தை லட்டு போல பிடித்து ஸ்டம்பிங் செய்யாமல், அதனுடன் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினார் அக்மல். பந்து அவரது கையுறையில் பட்டு நழுவ, மஸ்டர்ட் நிதானமாக கிரீஸுக்குள் திரும்பினார். இந்த சொதப்பல், அகமலின் விளையாட்டு நாட்களில் அவர் செய்த எண்ணற்ற தவறுகளை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியது.

கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்

இந்த சம்பவத்தைப் பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கமெண்டுகளைத் தெறிக்கவிட்டனர். ஒரு ரசிகர், "2010-களின் நினைவுகளை மீண்டும் எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி காமி பாய்" என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவரோ, "இதைப் பார்க்கும்போது எனக்கு 14 வயது ஆனது போல் உணர்கிறேன், சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது" என்று கூறி அக்மலை கிண்டலடித்தார். இணையத்தில் மீம் கிரியேட்டர்களுக்கு இது ஒரு பெரிய விருந்தாக அமைந்தது.

தப்பிய பாகிஸ்தான்

அக்மலின் இந்த "பேருதவியால்" இரண்டாவது வாய்ப்பு பெற்ற பில் மஸ்டர்ட், அதனை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு அரைசதம் அடித்து, மொத்தம் 58 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணிக்கு அழுத்தம் கொடுத்தார். எனினும், கேப்டன் முகமது ஹஃபீஸின் அபாரமான அரைசதமும், மற்ற பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சும் பாகிஸ்தான் அணியை காப்பாற்றியது. கடைசி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தத்தில், பாகிஸ்தான் அணி போட்டியில் ஜெயித்தாலும், கம்ரான் அக்மல் தன் பங்கிற்கு ரசிகர்களுக்கு ஒரு 'டைம் மெஷின்' பயணம் கொடுத்து, பழைய நினைவுகளை கிளறிவிட்டு, வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டார். கம்ரான் பாய், நீங்கள் உண்மையிலேயே மாறவே இல்லை!

Story first published: Saturday, July 19, 2025, 12:22 [IST]
Other articles published on Jul 19, 2025
English summary
Kamran Akmal Trolled by Fans for Another Blunder at World Championship of Legends 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+