Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து சதங்கள்... டெஸ்ட்ல மட்டும் 23... அதிரடி கிளப்பும் வில்லியம்சன்!

தாரங்கா : நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் தாரங்காவின் பே ஓவல் மைதானத்தில் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று துவங்கியுள்ளது.

இதில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 431 ரன்களை அடித்துள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து ஆடி வருகிறது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்த போட்டியில் சதமடித்துள்ளார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 23வது சதம்.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் இரு அணிகளுக்கான முதல் தொடர் தாரங்காவின் பே ஓவல் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

23வது டெஸ்ட் சதம்

23வது டெஸ்ட் சதம்

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 431 ரன்களை அடித்துள்ளது. இதையடுத்து தற்போது பாகிஸ்தான் தனது பேட்டிங்கை செய்து வருகிறது. இந்த போட்டியில் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சதமடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது 23வது சதம் இது.

இரட்டை சதமடித்த வில்லியம்சன்

இரட்டை சதமடித்த வில்லியம்சன்

கடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் தனது இரட்டை சதத்தை அடித்திருந்தார். இரண்டாவது போட்டியில் தனது குழந்தை பிறப்பையொட்டி அவர் விடுப்பில் சென்றிருந்த நிலையிலும், அந்த அணி சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது.

மீண்டும் போட்டிகளில் வில்லியம்சன்

மீண்டும் போட்டிகளில் வில்லியம்சன்

இதையடுத்து கேன் வில்லியம்சனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆயினும் ஒருசில தினங்களிலேயே அவர் மீண்டும் அணிக்கு திரும்பி பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். மேலும் முதல் இன்னிங்சில் டெஸ்ட் போட்டிகளில் தனது 23வது சதத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.

261 பந்துகளில் சதம்

261 பந்துகளில் சதம்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 261 பந்துகளில் அவர் தனது சதத்தை அடித்துள்ளார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடக்கம். இதையடுத்து இந்த தலைமுறையின் சிறப்பான பேட்ஸ்மேன் அவர் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Sunday, December 27, 2020, 11:42 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+