Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC FINAL: வில்லியம்சன் பங்கேற்பதில் சிக்கல்.. நியூசிலாந்து அணிக்கு பெரும் இடி..சோலி முடிஞ்சது!

லார்ட்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்டன் நகரில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியாவுடனான இறுதிப்போட்டிக்கு தயாராகும் விதமாக இந்த போட்டியில் நியூசிலாந்து விளையாடுகிறது. முதல் போட்டி சமனில் முடிவடைந்துள்ள நிலையில் 2வது போட்டி ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நியூசி,வீரர்கள் காயம்

நியூசி,வீரர்கள் காயம்

இந்நிலையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இடதுகை தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவர் சிகிச்சைப்பெற்று வருகிறார். அதே போல அணியின் நட்சத்திர பவுலர்கள் மிட்சல் சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரும் காயத்தால் பாதிக்கப்பட்டனர். இதில் ட்ரெண்ட் போல்ட் குணமடைந்துவிட்டார் என்றும், சாண்ட்னர் தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

கேப்டன் கேன் வில்லியம்சனின் நிலை மட்டும் இன்னும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் வில்லியம்சன் பங்கேற்க முடியவில்லை என்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்க முடியாது. இந்திய அணிக்கு எதிராக வில்லியம்சனின் பேட்டிங் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அவரால் ஒருவேளை பங்கேற்க முடியாமல் போய்விட்டால், நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

பிரச்சினை

பிரச்சினை

கேன்வில்லியம்சன் குறித்து மருத்துவர் கூறியுள்ள தகவலில், வில்லியம்சனுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை பெரிதாக இல்லை. எனினும் அவர் 2வது டெஸ்டில் விளையாடினால் மீண்டும் வலி அதிகரித்து பெரிய பிரச்சினை ஏற்படும் எனக் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, June 9, 2021, 16:28 [IST]
Other articles published on Jun 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+