
தடுமாறிய இலங்கை
2வது நாள் ஆட்ட நேர தொடக்கத்தில் வில்லியம்சன் மற்றும் நிக்கோலஸ் ஜோடி இலங்கை அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால், பந்தை சரியான முறையில் ஸ்விங் செய்ய முடியவில்லை.

ரன் குவிப்பு
இதனை நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பயன்படுத்தி கொண்டனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் 171 பந்துகளை பிடித்து சதம் அடித்தார். மறுமுனையில் ஹென்றி நிக்கோலஸ் முதலில் நிதானமாக விளையாடி 173 பந்துகளில் சதம் அடித்தார். இதனையடுத்து, சிமிண்ட் போட்டது போல் இந்த ஜோடி களத்தில் நின்று கொண்ட இலங்கை பந்துவீச்சாளர்களை கடுமையாக சிரமத்திற்கு ஆளாக்கினர்.

வில்லியம்சன் 6வது இரட்டை சதம்
தொடர்ந்து அபாரமாக விளையாடிய வில்லியம்சன் 285 பந்துகளை எதிர்கொண்டு இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 363 ரன்கள் சேர்த்த நிலையில், வில்லியம்சன் 215 ரன்களுக்கு வெளியேறினார். இதில் 23 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இது வில்லியம்சனின் 6வத இரட்டை சதமாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வில்லியம்சன் 8 ஆயரம் ரன்களை கடந்தார் வில்லியம்சன் ஆட்டம் இழந்த உடன் , நிக்கோலஸ் தனது அதிரடியை அதிகப்படுத்தி 240 பந்துகளில் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.

நிக்கோல்ஸ் 200
இதில் 4 சிக்சர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 580 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பெர்னாண்டோ 6 ரன்களிலும், குசேல் மெண்டிஸ் டக் அவுட்டாகியும் வெளியற, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications











