Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த போட்டியில கலந்துக்கறேன்... வெற்றி கிட்டத்தான் இருக்கு.. கேன் வில்லியம்சன்

துபாய் : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை ஆர்சிபி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்து கடந்த 2 போட்டிகளில் விளையாடாமல் உள்ள அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அடுத்த போட்டியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதவுள்ள நிலையில், கேன் வில்லியம்சனின் பங்கேற்பு இந்த தொடரில் அந்த அணி தனது முதல் வெற்றியை பெற காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விறுவிறுப்பான போட்டிகள்

விறுவிறுப்பான போட்டிகள்

ஐபிஎல்லின் இந்த ஆண்டிற்கான சீசன் யூஏஇயில் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் ஐபிஎல்லின் 8 அணிகளும் தங்களது முழு பலத்தை காண்பித்து விளையாடி வருகின்றன. கோப்பையை வெல்லும் முனைப்பு அனைத்து அணிகளுக்கும் உள்ள நிலையில், தினந்தோறும் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இரு போட்டிகளில் தோல்வி

இரு போட்டிகளில் தோல்வி

இதனிடையே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் தன்னுடைய வலிமையை தொடரில் நிரூபித்து வருகிறது. ஆனால் அந்த அணி இதவரை ஆர்சிபி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுடன் மோதி, இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது.

அடுத்த போட்டியில் வில்லியம்சன் பங்கேற்பு

அடுத்த போட்டியில் வில்லியம்சன் பங்கேற்பு

அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பயிற்சி ஆட்டத்தின்போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் பங்கேற்கவில்லை. இரண்டாவது போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பார் என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேன் வில்லியம்சன் இல்லாத அணி

கேன் வில்லியம்சன் இல்லாத அணி

அவர் அணியில் இணைவதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தன்னுடைய முதல் வெற்றியை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேன் வில்லியம்சன் அணியில் இல்லாத காரணத்தால் மிடில் ஆர்டரில் வலிமையை காண முடியாத அந்த அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியுடனும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆருடனும் தோல்வியை சந்தித்துள்ளது.

Story first published: Sunday, September 27, 2020, 18:03 [IST]
Other articles published on Sep 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+