Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... ரொம்ப சந்தோஷமா இருக்கு... வில்லியம்சன் உற்சாகம்!

வெல்லிங்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் முதல் அணியாக நியூசிலாந்து தேர்வாகியுள்ளது.

இங்கிலாந்து -இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரில் இநதியா 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் நிலையில் இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட தான் மிகுந்த ஆர்வமுடன் உள்ளதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தேர்வு

இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தேர்வு

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இருந்த நிலையில் புள்ளிகள் அடிப்படையில் தற்போது நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா நிலையை தீர்மானிக்கும்

இந்தியா நிலையை தீர்மானிக்கும்

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது. இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் துவங்கவுள்ள நிலையில் இந்த தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெறும் நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறும்.

லார்ட்சில் இறுதிப்போட்டி

லார்ட்சில் இறுதிப்போட்டி

மாறாக இந்த தொடரில் இங்கிலாந்து 3 போட்டிகளில் வெற்றி பெறும் நிலையில், லார்ட்சில் வரும் ஜூன் 18 முதல் 22 வரையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும். இதனிடையே இந்த தொடர் டிரா ஆகும் பட்சத்தில் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

இறுதிப்போட்டியில் விளையாட ஆர்வம்

இறுதிப்போட்டியில் விளையாட ஆர்வம்

இதனிடையே முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட தான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ஸ்போர்ட்ஸ் டுடேவின் யூடியூப் பக்கத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 3, 2021, 18:43 [IST]
Other articles published on Feb 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+