Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வர வேண்டாம்.. டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து சிக்னல் தந்த கேன் வில்லியம்சன்.. என்ன மனுஷன்யா.. வைரலான வீடியோ

ஓவல்: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் செய்த காரியம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கேன் வில்லியம்சன் அதிரடி காரணமாக நியூசிலாந்து வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

வெற்றி

வெற்றி

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வெறும் 297 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. முக்கியமாக கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி இரட்டை சதம் அடித்தார்.

செம

செம

கடந்த போட்டியில்தான் கேன் வில்லியம்சன் சதம் அடித்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரட்டை சதம் அடித்துள்ளார். இரட்டை சதம் அடித்த கேன் 238 ரன்களுக்கு அவுட் ஆனார். இந்த நிலையில் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்த பின் டிக்ளேர் செய்து விடுவார் என்று கருதப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் களத்தில் இளம் வீரர் டேரில் மிட்சல் 80 ரன்களை கடந்து ஆடி வந்தார். இளம் வீரர் டேரில் சதம் அடித்தால் அவருக்கு அது முதல் சதமாக இருக்கும். இதனால் அவர் சதம் அடிக்கும் ஆர்வத்தில் இருந்தார். ஆனால் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் என்பதால், ஆட்டத்தை டிக்ளேர் செய்யும் எண்ணத்தில் நியூசிலாந்து அணி இருந்தது.

சிறப்பு

ஆனால் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சக வீரர் டேரில் மிட்சலிடம் தொடர்ந்து ஆடும்படி கூறியுள்ளார். டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து சிக்னல் கொடுத்த வில்லியம்சன், நீங்கள் தொடர்ந்து ஆடுங்கள், சதம் அடியுங்கள் என்று டேரிலிடம் என்று கூறினார். நேரம் சென்றாலும் பரவாயில்லை, ஆடுங்கள் என்று கேன் வில்லியம்சன் டேரிலிடம் கூறினார்.

சதம்

சதம்

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதோடு டேரில் அதன்பின் அதிரடியாக ஆடி தனது முதல் சதத்தை அடித்தார். டேரில் 102 ரன்கள் எடுத்த பின்தான் கேன் வில்லியம்சன் டிக்ளேர் செய்தார். கேன் வில்லியம்சனின் இந்த குணம் பெரிய அளவில் பாராட்டப்பட்டுள்ளது. 659 ரன்களுக்கு நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்துள்ளது.

Story first published: Tuesday, January 5, 2021, 11:47 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+