Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குழந்தையை பார்த்தாச்சு... திரும்பவும் விளையாட வந்தாச்சு... பொறுப்பான வில்லியம்சன்!

வெல்லிங்டன் : தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி கடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கேட்பன் கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அவர் அணிக்கு திரும்பியுள்ளார்.

2வது போட்டியில் பங்கேற்காத வில்லியம்சன்

2வது போட்டியில் பங்கேற்காத வில்லியம்சன்

தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி கடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. முன்னதாக அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதகளம் புரிந்தார்.

குழந்தை குறித்து அறிவிப்பு

குழந்தை குறித்து அறிவிப்பு

இதனிடையே வில்லியம்சனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் கேன் வில்லியம்சன். தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தையும் அதில் அவர் வெளியிட்டிருந்தார்.

மீண்டும் இணைந்த வில்லியம்சன்

மீண்டும் இணைந்த வில்லியம்சன்

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வகையில் அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்த தொடரின் முதல் போட்டி வரும் 26ம் தேதி துவங்கவுள்ளது. இதை கிரிக்கெட் நியூசிலாந்து உறுதிப்படுத்தியுள்ளது.

2வது இடத்தில் நியூசிலாந்து

2வது இடத்தில் நியூசிலாந்து

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி இந்தியாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கொள்வது முக்கியமாக உள்ளது.

இந்தியாவின் சொதப்பல்

இந்தியாவின் சொதப்பல்

ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பான நியூசிலாந்தின் வெற்றி மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்தியாவின் மோசமான தோல்வி ஆகியவை அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்புகளை அதிகப்படுத்தி வருகிறது.

Story first published: Tuesday, December 22, 2020, 13:53 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+