
உலக கோப்பை 2019 அணியின் கேப்டன்
நியூசிலாந்து கேப்டனாக செயல்பட்டுவரும் கேன் வில்லியம்சன் அந்த அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6476 ரன்களை குவித்தவர். சராசரியாக 50.99 புள்ளிகளை பெற்றவர். மேலும் 151 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் 6173 ரன்களை குவித்துள்ளார். கடந்த 2019 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு அணியை இறுதிப்போட்டி வரை வழிநடத்தி சென்றவர்.

டேவிட் வார்னருடன் உரையாடல்
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வீட்டில் முடங்கியுள்ள கேன் வில்லியம்சன், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சக வீரர் டேவிட் வார்னருடன் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஈடுபட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார். அப்பொழுது உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் விராட் கோலி, மற்றும் ஏபி டீ வில்லியர்சை கைகாட்டியுள்ளார் கேன் வில்லியம்சன்.

விராட் மற்றும் வில்லியர்ஸ்
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் விராட் கோலி மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார் கேன் வில்லியம்சன். கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் தன்னை முதலிடத்தில் நிறுத்திக்கொள்ளும் தாகமுடையவர் விராட் கோலி என்றும்கூறியுள்ளார். இதேபோல வில்லியர்சும் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகமாக கற்றுக் கொள்ளலாம்
கோலியின் ஆட்டத்தை பார்ப்பது சிறப்பானது என்றும், அவருடன் எதிரணியில் விளையாடுவது உற்சாகத்தை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் ஆட்டத்திலிருந்து அதிகமாக கற்றுக் கொள்ளலாம் என்றும், அவர் தனது ஸ்தானத்தை மிகவும் உயரமாக அமைத்துக் கொண்டுள்ளார் என்றும் கேன் வில்லியம்சன் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications