Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இது ஒன்னு தான் டீமா.. நிறையா இருக்கு” ஐதராபாத் அணியின் புறகணிப்பு.. கேன் வில்லியம்சன் பளார் பேச்சு

மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துரோகம் செய்தது குறித்து கேன் வில்லியம்சன் மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

இதில் ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியமடைந்த விஷயம், ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை விடுவித்தது தான்.

ஐதராபாத் பட்டியல்

ஐதராபாத் பட்டியல்

2015ம் ஆண்டு முதல் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் வில்லியம்சன் 2021ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அவரின் கேப்டன்சியில் கடந்தாண்டு ஐதராபாத் அணி 8வது இடத்தையே பிடித்தது. இதே போல வில்லியம்சனும் பேட்டிங்கில் மோசமாக சொதப்பினார். ரூ.14 கோடி கொடுத்து வாங்கப்பட்ட அவர் 13 இன்னிங்ஸ்களில் 216 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால் தான் அந்த அணி அதிரடியாக தூக்கியுள்ளது.

வில்லியம்சன் பதில்

வில்லியம்சன் பதில்

இந்நிலையில் இதுகுறித்து கேன் வில்லியம்சன் பேசியுள்ளார். அதில், எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை, கவலையும் இல்லை. இந்த உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஐபிஎல் சிறந்தது எனக்கூறலாம். ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு அணிக்காக ஆடுவார்கள். நிறைய தொடர்கள், நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. எனவே டி20 கிரிக்கெட்டை அப்படியே விட்டுவிட மாட்டேன்.

ஆச்சரியமில்லை

ஆச்சரியமில்லை

சிறிது நாட்களுக்கு முன்பாகவே ஐதராபாத் அணி நிர்வாகம் என்னை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார்கள். எனவே அவர்களின் அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. அந்த அணியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, நிறைய நினைவுகளை கொடுத்துள்ளது என கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

வில்லியம்சனின் பதிலடி

வில்லியம்சனின் பதிலடி

இது ஒருபுறம் இருக்க, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய தொடரில் வில்லியம்சன் களமிறங்குகிறார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 18ம் தேதி முதல் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளது. பணிச்சுமை காரணமாக டி20 தொடரில் வில்லியம்சன் ஓய்வில் இருக்கலாம் என முடிவெடுத்திருந்தார். ஆனால் தற்போது அதனை ரத்து செய்துவிட்டு, ப்ளேயிங் 11ல் களமிறங்குகிறார்.

Story first published: Wednesday, November 16, 2022, 19:22 [IST]
Other articles published on Nov 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+