Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final 2021: கோலியின் தூக்கத்தை கெடுக்கும் "இருவர்".. பும்ராவுக்கு காத்திருக்கும் "சவால்"

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தான் இந்திய ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு. கிரிக்கெட் ஹாட் டாபிக். வீரர்களின் ஹார்ட் பீட்-ஐ எகிற வைக்கும் சிந்தனை என்று இந்த தொடரை பல வகையில் அடையாளப்படுத்தலாம். இதில், இந்திய கேப்டன் கோலியை டார்ச்சர் செய்ய காத்திருக்கும் இரு வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இதற்காக, அடுத்த மாதம் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். சூடான களம். அதுவும் 'நியூட்ரல்' வென்யூ என்று ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கின்றன.

 நான்கே நாட்களில்

நான்கே நாட்களில்

இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றிப் பெறவே வாய்ப்புகள் அதிகம் என்பதே பல எக்ஸ்பெர்ட்ஸ்களின் கணிப்பு, கருத்தும் கூட. இதற்கு முக்கிய காரணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக, இதே இங்கிலாந்து ஆடுகளத்தில் நியூசிலாந்து, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனால் ஆடுகளத்தில் தன்மை, பக்குவம், தட்பவெட்ப நிலை, தகவமைப்பு என அனைத்து விஷயங்களையும், இவ்விரண்டு போட்டிகளில் நியூசிலாந்து புரிந்து வைத்து கொள்ளும் அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. ஜூன் 14ம் தேதி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை முடிக்கும் இங்கிலாந்து அடுத்த நான்கே நாட்களில், அதாவது ஜூன் 18ல் இந்தியாவை எதிர்கொள்கிறது. ஸோ, அவர்களை பொறுத்தளவில், அட்டகாசமான ஃபார்மில் இருப்பார்கள்.

 சமாளிக்குமா?

சமாளிக்குமா?

ஆனால், இந்தியாவின் நிலைமை இதற்கு டோட்டலாக நேர்மாறாக உள்ளது. இங்கிலாந்து கண்டிஷனில், அதுவும் பயிற்சிப் போட்டிகளே இல்லாமல், நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போ சொல்லுங்க, யாருக்கு ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்பிருக்குனு? அதுமட்டுமல்ல, நியூசிலாந்தின் இரு முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை வேர்க்க விறுவிறுக்க வைக்க காத்திருக்கின்றனர். அவர்கள் இருவர் யார் என்பதை பார்த்துவிடலாம்.

 டாப் மோஸ்ட் டேஞ்சர்

டாப் மோஸ்ட் டேஞ்சர்

இந்திய கேப்டன் கோலியின் தூக்கத்தை கெடுக்கும் நம்பர்.1 வீரராக இருக்கப் போவது, நியூஸி., கேப்டன் கேன் வில்லியம்சன் தான். நியூசிலாந்து மண்ணுக்கு வெளியே இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் வில்லியம்சன் அடித்த மொத்த ரன்கள் 2,680. ஆவரேஜ் 42.53. பெஸ்ட் ஸ்கோர் 166. 9 சதம், 19 அரைசதம். குறிப்பாக, இறுதிப் போட்டி நடைபெறும் இங்கிலாந்தில் நான்கு போட்டிகளில் விளையாடி 247 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சம் 132. ஆவரேஜ் 30.87. ஸோ, கோலி இப்போதே பிபி மாத்திரைகளை தயார் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

 நின்னா காலி

நின்னா காலி

அணியின் மோஸ்ட் சீனியர் வீரர். குறிப்பாக, நியூசிலாந்தை விட்டு வெளி மைதானங்களில், அதாவது வெளி நாடுகளில் விளையாடுவது என்றால், இவருக்கு தனி எனர்ஜியே வந்துவிடும். இதுவரை வெளிநாடுகளில் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3263 ரன்கள் குவித்துள்ளார். ஆவரேஜ் 40.78. பெஸ்ட் ஸ்கோர் 290. டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோரே இதுதான். குறிப்பாக, இங்கிலாந்தில் 7 போட்டிகளில் ஆடியுள்ள டெய்லர், 523 ரன்கள் விளாசியுள்ளார். ஆவரேஜ் 40.23. பெஸ்ட் - 154 (நாட் அவுட்). இவரை அவுட் செய்வது வில்லியம்சனை விட சற்று சுலபம் என்றாலும், எப்போது நின்று அடிப்பார் என்று யாராலும் கணிக்க முடியாது.

ஸோ, கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கில் இவர்கள் இருவரை சமாளித்துவிட்டால் நியூசிலாந்தை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.

Story first published: Tuesday, May 25, 2021, 17:26 [IST]
Other articles published on May 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+