Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் "டார்கெட்" இந்தியா தான்.. இந்த மேட்ச் போனாலும் பரவாயில்ல.. கேன் வில்லியம்சன் "ஷாக்" அறிவிப்பு

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக, கேன் வில்லியம்சன் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கவிருக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இதற்காக இந்திய அணி, தற்போது போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் ஸ்டேடியத்தின் ஹோட்டலில் குவாரண்டைனில் உள்ளது. எந்தவித பயிற்சிப் போட்டியும் இன்றி, நேராக இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடுகிறது.

 கான்வே இரட்டை சதம்

கான்வே இரட்டை சதம்

அதேசமயம், நியூசிலாந்து அணி இங்கிலாந்தோடு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், டெவோன் கான்வே-யின் அபாரமான இரட்டை சதத்தால் போட்டியை டிரா செய்த நியூசிலாந்து, எட்ஜ்பேஸ்டனில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது.

 முழங்கையில் ஊசி

முழங்கையில் ஊசி

இந்த சூழலில், முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக அவதிப்பட்ட நியூசி., கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விலகுவதாக அறிவித்துள்ளார். இது அந்நாட்டு ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், "கேன் வில்லியம்சன் ஒரு டெஸ்ட் போட்டியை தவறவிடுவது என்பது எளிதான முடிவு அல்ல. ஆனால் இது சரியானது என்று நாங்கள் கருதுகிறோம், அவர் பேட்டிங் செய்யும்போது அவர் அனுபவிக்கும் எரிச்சலைப் போக்க அவரது முழங்கையில் ஒரு ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது.

 டாம் லாதம் கேப்டன்

டாம் லாதம் கேப்டன்

சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, ஜூன் 18 முதல் தொடங்கும் அந்த போட்டிக்கு அவர் தயாராக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். வில்லியம்சன் இல்லாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக டாம் லாதம் அணியின் கேப்டனாக செயல்படுவார்" என்றார்.

 இந்தியா தான் டார்கெட்

இந்தியா தான் டார்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வில்லியம்சன் தான் விளையாட வேண்டாம் என்று எடுத்த முடிவு சாதாரணமானது அல்ல. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது போட்டியில் வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து உள்ளது. இந்த கோப்பை மன ரீதியாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராக உதவியிருக்கும். அப்படிப்பட்ட மேட்சை, அதே இறுதிப் போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே விட்டு விலகியிருக்கிறார் வில்லியம்சன்.

Story first published: Wednesday, June 9, 2021, 20:05 [IST]
Other articles published on Jun 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+