Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்துக்கு எதிரான தொடர்ல இருந்து நீக்கப்பட்டிருக்காரு நியூசிலாந்து கேப்டன்!

வெல்லிங்டன் : நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

இந்நிலையில் முழங்கை காயம் காரணமாக அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் முழுமையாக காயத்திலிருந்து மீண்டு வருவார் என்று அணியின் கோச் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முழங்கை காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சிறப்பாக தயாராவார்

சிறப்பாக தயாராவார்

இதனிடையே, கேன் வில்லியம்சன் இல்லாதது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியை எதிர்கொள்வதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள அணியின் கோச் கேரி ஸ்டெட், ஆயினும் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக வில்லியம்சன் தன்னுடைய காயத்திலிருந்து தேறி வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

100% தேறிவிடுவார்

100% தேறிவிடுவார்

இதுகுறித்து வில்லியம்சன் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகத்துடன் தான் பேசியுள்ளதாகவும் அவர் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தன்னுடைய காயத்திலிருந்து 100 சதவிகிதம் தேறிவிடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கும் அவர் முழுமையாக தயாராவார் என்றும் கூறியுள்ளார்.

வங்கதேச தொடர் மிஸ்

வங்கதேச தொடர் மிஸ்

கடந்த மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் உள்ளிட்ட தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட கேன் வில்லியம்சனின் முழங்கையில் கடந்த சில வாரங்களாக வலி இருந்ததாகவும் தற்போது அந்த காயத்துடன் போட்டிகளை எதிர்கொள்வது சிரமமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால் தற்போது வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரை அவர் மிஸ் செய்யவுள்ளார்.

Story first published: Tuesday, March 9, 2021, 14:19 [IST]
Other articles published on Mar 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+