
2வது டெஸ்ட் போட்டி
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது இரு அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாக்லி ஓவலில் நடைபெற்று வருகிறது.

சதமடித்த கேப்டன்
முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சதமடித்த நிலையில் தற்போது இரண்டாவது போட்டியில் இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். ஹாக்லி ஓவலில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 238 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 4வது சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.

இரட்டை சதமடித்த வில்லியம்சன்
முன்னதாக முதல் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் 129 மற்றும் 21 ரன்களை அடித்த அவர் முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 251 ரன்களை அடித்து இரட்டை சதத்தை அடித்தார். குழந்தை பிறப்பின் காரணமாக இரண்டாவது போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

28 பவுண்டரிகள்
இந்த போட்டியில் 364 பந்துகளை எதிர்கொண்டு, 238 ரன்களை குவித்துள்ளார் கேன் வில்லியம்சன். இதில் 28 பவுண்டரிகளும் அடக்கம். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக தன்னுடைய அணியை தயார்படுத்தி வருகிறார். கேப்டனாக இருந்து தன்னுடைய அணியை சிறப்பாக வழிநடத்தி இரட்டை சதத்தையும் அடித்துள்ளார்.

கைகொடுக்கும் அதிர்ஷ்டம், திறமை
கடந்த மாதத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரட்டை சதம், தறபோது பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம், ஐசிசி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் என அடுத்தடுத்த சிறப்புகளை பெற்று வருகிறார் வில்லியம்சன். அவருக்கு அதிர்ஷ்டமும் திறமையும் கைகொடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











