“அவர் ஒருவர் தான் பெரும் தலைவலி”.. இந்திய அணியுடனான டி20 தொடர்.. கேன் வில்லியம்சன் பேச்சு!
வெல்லிங்டன்: இந்திய அணியுடனான டி20 தொடரில் இருக்கும் சவால்கள் குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.
ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தொடர்
இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை வெல்லிங்டனில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளனர். டி20 உலகக்கோப்பை டொடரில் இரு அணிகளுமே அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்து வந்துள்ளதால், அதன் கவலையை நீட்க வெற்றியை தேடி வருகின்றன.

வில்லியம்சன் பதில்
இந்நிலையில் இந்தியாவை சமாளிப்பது குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் குறியுள்ளார். அதில், இந்தியாவின் நம்பர் 4 பேட்ஸ்மேனை சமாளிப்பது தான் எங்களின் பிரச்சினையே ஆகும். சூர்யகுமார் யாதவ் உலகின் தலைசிறந்த டி20 பேட்டர் ஆகும். அதனை உலகக்கோப்பை தொடரின் போது தெளிவாக பார்த்திருந்தோம். மிகவும் ஸ்பெஷல் வீரர்.

சவாலான ஒன்று
நியூசிலாந்து அணியின் அனைத்து பவுலர்களுக்குமே அவரை சமாளிப்பது சற்று சவாலான காரியம் தான். எனினும் அவரை வீழ்த்த வியூகங்களை செய்வார்கள். சர்வதேச கிரிக்கெட்டின் சிறப்பம்சமே அதுதான். சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடி அதில் சிறப்பாக செயல்படுவது தான் சிறப்பு என வில்லியம்சன் கூறியுள்ளார்.

தரமான ஃபார்ம்
சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 239 ரன்களை விளாசினார். அதுவும் 189.68 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அடித்துள்ளார். அந்த தொடரில் 3வது அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் இதுதான் ஆகும். எனவே இவர் நியூசிலாந்து போட்டியிலும் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications