தோளோடு தோள்.. அப்படிபட்ட தருணம் அது.. இணையத்தை கலக்கிய புகைப்படம்.. வில்லியம்சன் உருக்கமான கருத்து!
நியூசிலாந்து: விராட் கோலி - வில்லியம்சன் கட்டியணைந்த வைரல் புகைப்படம் குறித்து வில்லியம்சன் மனம் உருகியுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து கோப்பை வென்றது.
இந்த போட்டி முடிந்து ஒரு வார காலம் ஆகப்போகும் நிலையிலும், அதுகுறித்த பேச்சுக்கள் இன்னும் அடங்கவில்லை.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்
மழையின் காரணமாக 6ம் நாள் வரை நடந்த இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 217 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களும் இந்திய அணி எடுத்தது. இதன் மூலம் வெற்றி இலக்காக இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்துக்கு 139 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது. எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

வைரல் போட்டோ
நியூஸிலாந்து அணியின் வெற்றிக்குப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகூறி வந்தனர். ஆனால் அன்று அனைவருக்கும் 'பிக் ஆஃப் தி டே' வாக அமைந்த புகைப்படம் விராட் - வில்லியம்சன் இணைந்திருந்ததுதான். வெற்றிக்கான ரன்னை நியூஸிலாந்து அடித்த பின்னர், அந்த அணியின் கேப்டன் வில்லியம்ஸனைக் கட்டி அணைத்து இந்திய கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இன்றளவும் இந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

ஸ்பெஷலான தருணம்
இந்நிலையில் இந்த புகைப்படம் குறித்து வில்லியம்சன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இது ஒரு சிறந்த தருணம். தோள் மீது தோள் பட்டு கட்டியணைத்த போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நானும் விராட்டும் நீண்ட வருட நண்பர்கள். இதுதான் விளையாட்டின் சிறந்த பகுதியாகும். உலகின் பல்வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு மக்களை சந்திக்கலாம். இது ஒரு ஸ்பெஷலான தருணமாகும்.

போட்டியின் சுவாரஸ்யம்
தொடர்ந்து போட்டி குறித்து பேசிய அவர், கடைசி நாள் ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அன்றைய தினத்தில் தொடக்கத்திலேயே விக்கெட்கள் விழுந்தது சரியாக இருந்தது. அது வெற்றிக்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது. இந்திய அணியின் பதிலடி மிகவும் சிறப்பாக இருந்தது.அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடினர் எனத்தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications