பதவி விலகினார் கேன் வில்லியம்சன்.. நியூசிலாந்து அணிக்கு இனி புதிய தலைமை.. யார் என்று தெரியுமா??
நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அனைத்து கிரிக்கெட் அணிகளும் தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிகட்ட போட்டிகளில் அதிக கவனங்களை செலுத்தி வருகின்றன.
அந்தவகையில் நியூசிலாந்து அணி அடுத்ததாக வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

பதவி விலகல்
இந்நிலையில் தான் நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு பிரெண்டன் மெக்கலம் ஓய்வை அறிவித்த பிறகு, அனைத்து வடிவ அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட வில்லியம்சன், உலகளவில் பெரும் புகழை பெற்றார். இதற்கு காரணம் அவரின் நிதான தன்மை தான்.

கேப்டன்சி புள்ளிவிவரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சீசனிலேயே நியூசிலாந்து அணிக்கு முதல் ஐசிசி கோப்பையை வென்று கொடுத்தார். மேலும் ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக அரையிறுதி, இறுதிப்போட்டி என அழைத்துச்சென்றார். 38 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ள அவர் 22 வெற்றி, 10 தோல்விகளை பெற்றுத்தந்துள்ளார். 8 போட்டிகள் சமனில் முடிவடைந்தது. பணிச்சுமை காரணமாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன்சியை மட்டும் துறப்பதாக கூறியுள்ளார்.

புதிய கேப்டன் யார்?
கேன் வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக டிம் சவுத்தி புதிய டெஸ்ட் கேப்டனாக செயல்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நியூசிலாந்துடன் பல்வேறு போட்டிகளில் பணியாற்றிய அனுபவமிக்க வீரர் டிம் சவுத்தி. அவர், வரவுள்ள பாகிஸ்தான் தொடரில் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தெரிகிறது.

வில்லியம்சன் விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள வில்லியம்சன், நியூசிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்தியது மிகப்பெரிய கவுரவம் எனக்கு. கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான டெஸ்ட் வடிவத்தை நான் வழிநடத்தி வெற்றி கண்டதில் மகிழ்ச்சி. கேப்டன் என்ற பொறுப்பை ஏற்றால் அதிக பணிச்சுமை இருக்கும். எனவே அதில் இருந்து விலகுவதற்கான சரியான நேரம் வந்துவிட்டது என நினைப்பதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications