Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குழந்தை பிறப்பு... ஆனாலும் 2வது டெஸ்ட் போட்டியில விளையாடுவேன்... அடம்பிடிக்கும் வில்லியம்சன்!

வெல்லிங்டன் : நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு இன்னும் சில தினங்களில் முதல் குழந்தை பிறக்கவுள்ளது.

ஆயினும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தான் விளையாடவுள்ளதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது முடிவை எடுக்க அவகாசம் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் அணிக்கு சாதகமாக முடிவெடுத்துள்ளதாகவும் கோச் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் நாளை துவக்கம்

இரண்டாவது டெஸ்ட் நாளை துவக்கம்

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் 134 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை நியூசிலாந்து பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அவர் அடித்த 251 ரன்கள்.

விடுப்பெடுக்காத வில்லியம்சன்

விடுப்பெடுக்காத வில்லியம்சன்

இந்நிலையில் அவருடைய முதல் குழந்தை பிறப்பை இன்னும் சில தினங்களில் எதிர்பார்த்துவுள்ள வில்லியம்சன், அதற்காக விடுப்பெடுக்காமல் தொடர்ந்து நாளை துவங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் தொடருக்கு இடையில் விடுப்பு எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டியே அவரது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பான முடிவு

சிறப்பான முடிவு

இந்நிலையில் தனது முடிவை எடுக்க வில்லியம்சனுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அணியின் கோச் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் கேன் மற்றும் அவரது மனைவி சாராவிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று முன்னதாக ஸ்டெட் தெரிவித்திருந்தார்.

3வது இரட்டை சதம்

3வது இரட்டை சதம்

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அடுத்தபடியாக சிறப்பான வீரராக இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இணையாக கேன் வில்லியம்சன் உள்ளார். கடந்த போட்டியில் 251 ரன்களை அடித்ததன்மூலம் 3வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றார் வில்லியம்சன்.

வெற்றியை தொடர திட்டம்

வெற்றியை தொடர திட்டம்

கடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து 14வது வெற்றியை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர அணி நிர்வாகம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேன் வில்லியமசனின் இந்த முடிவு முக்கியமானதாக உள்ளது.

Story first published: Thursday, December 10, 2020, 11:51 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+