காவ்யா மாறன் செய்த துரோகம்.. அதிரடி முடிவை கையில் எடுத்த வில்லியம்சன்.. இனி என்ன நடக்கப்போகுதோ??
மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துரோகம் செய்ததால் கடுப்பான கேன் வில்லியம்சன் அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தந்த விஷயம், ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனே ஏலத்திற்காக விடுவிக்கப்பட்டது தான்.

ஐதராபாத் பட்டியல்
2015ம் ஆண்டு முதல் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் வில்லியம்சனுக்கு கடந்த 2021ம் ஆண்டு பாதியிலேயே கேப்டனாக பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவரின் தலைமையில் கடந்தாண்டு ஐதராபாத் அணி 8வது இடத்தையே பிடித்தது. இதே போல வில்லியம்சனும் பேட்டிங்கில் மோசமாக சொதப்பினார். ரூ.14 கோடி கொடுத்து வாங்கப்பட்ட அவர் 13 இன்னிங்ஸ்களில் 216 ரன்களை மட்டுமே அடித்தார்.

அதிரடியான முடிவு
ஒரு சீசனில் சொதப்பிய போதும், சமீபத்தில் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார். இப்படி இருக்கையில் அவருக்கு துரோகம் செய்யும் விதமாக ஐதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் அதிரடியாக வெளியேற்றும் முடிவை கையில் எடுத்ததாக தெரிகிறது.

வில்லியம்சனின் பதிலடி
இந்நிலையில் இதற்கு பதிலடி தருவதற்காக வில்லியம்சனும் முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதாவது இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 18ம் தேதி முதல் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளது. பணிச்சுமை காரணமாக டி20 தொடரில் வில்லியம்சன் ஓய்வில் இருக்கலாம் என முடிவெடுத்திருந்தார். ஆனால் தற்போது அதனை ரத்து செய்துவிட்டு, ப்ளேயிங் 11ல் களமிறங்குகிறார்.

இந்திய அணி சவால்
பணிச்சுமையையும் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் டி20 கிரிக்கெட்டில் தனது தரத்தை நிரூபித்தே தீருவேன் என்ற முடிவோடு இந்தியாவுடன் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வில்லியம்சனின் ஆட்டத்தை சமாளிக்க வேண்டிய சவாலிலும் இந்திய அணி இருக்கிறது.


Click it and Unblock the Notifications