
பாகிஸ்தான் போட்டி
லீக் சுற்றின் போது நியூசிலாந்து அணி அசுர பலத்துடன் தொடர் வெற்றிகளை பதிவு செய்திருந்தது. 5 போட்டிகளில் 7 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதே போல பாகிஸ்தான் அணி அதிர்ஷ்டத்தால் உள்ளே வந்தாலும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. இதனால் இன்று இரு அணிகளுக்குமே சம வெற்றி வாய்ப்பு உள்ளது.

வில்லியம்சனின் ஐடியா
இந்நிலையில் தான் வாய்ப்பை தனது பக்கம் அதிகரிக்க டாஸின் போதே நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பணியை முடித்துள்ளார். சிட்னி மைதானத்தை பொறுத்தவரையில் மிகவும் வரண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் பேட்டிங்கிற்கு நன்கு உதவும். முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.

என்ன பலன்
அதற்கு முற்றிலும் பொருந்தியுள்ளது நியூசிலாந்து அணி. லீக் சுற்றில் நியூசிலாந்து அணி மொத்தமாக 3 போட்டிகளில் வெற்றி கண்டது. இதில் மூன்றிலுமே முதலில் பேட்டிங் செய்து தான் அந்த அணி வெற்றி கண்டது. சிட்னி மைதானமும் பேட்டிங்கிற்கு உதவக்கூடிய ஒன்று தான். அதன்படி தான் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ப்ளேயிங் 11ல் பலம்
இந்த போட்டியில் இரு அணிகளுமே எந்தவித மாற்றமும் இல்லாமல் லீக் சுற்றில் இருந்த ப்ளேயிங் 11 உடன் களமிறங்குகின்றனர். அதன்படி பார்த்தால் நியூசிலாந்தை விட பாகிஸ்தான் அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து துறைகளும் முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications