For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹெலிகாப்டர் ஷாட் எல்லாம் ஓல்டு, ஏரோபிளேன் வாங்குது பிசிசிஐ

By Staff

டெல்லி: இந்திய வீரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று விளையாட்டி விட்டு வரும்போது ஏற்படும் பயணக் களைப்பை போக்கும் வகையில், பிசிசிஐ சொந்தமான ஏரோபிளேன் வாங்க வேண்டும் என, முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

இந்தியா, வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் விளையாடுகின்றன. அதற்காக, விமானத்தில் சென்று வருவதேலேயே அவர்கள் டயர்டாகி விடுகிறார்கள்.

செலவைக் குறைக்கும் வகையிலும், வீரர்கள் டயர்டாவதை தடுக்கவும் தனியாக விமானத்தை வாங்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளதாக கபில் கூறியுள்ளார்.

கப்பல்- விமானம்

கப்பல்- விமானம்

அமெரிக்காவில் பிரபலமான என்.பி.ஏ., அணிகள் பல, சொந்தமாக சொகுசு கப்பல், விமானம் வைத்துள்ளன. சில கோல்ப் விளையாட்டு வீரர்களும் தனியாக விமானம் வைத்துள்ளனர். அதுபோல, இந்திய கிரிக்கெட் அணிக்கும் தனியாக விமானம் வாங்கலாம்.

காசுதான் கொட்டி கிடக்கே

காசுதான் கொட்டி கிடக்கே

அதை வாங்கும் சக்தி பிசிசிஐக்கு உள்ளது. நன்றாக சம்பாதிப்பதால், சில வீரர்கள் கூட சொந்தமாக ஏரோபிளேன் வாங்க முடியும் என்கிறார் கபில்தேவ்.

100 பேர் உட்காரக் கூடிய அளவில்

100 பேர் உட்காரக் கூடிய அளவில்

100 பேர் உட்காரக் கூடிய, ஏர்பஸ் ஏ-318 விமானம், ரூ. 500 கோடி ரூபாயாகும். இதைத் தவிர அதன் பராமரிப்பு செலவுகள் உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை அளித்ததன் மூலம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ரூ.16,347 கோடி கிடைக்க உள்ளது.

டோணிக்கு ஹெலிகாப்டர்

டோணிக்கு ஹெலிகாப்டர்

ஏற்கனவே உலகின் பணக்கார கிரிக்கெட் சங்கமான பிசிசிஐக்கு ஏரோபிளேன் வாங்குவது எல்லாம் சுஜூபி என்கிறார் கபில்தேவ். டோணியின் ஹெலிகாப்டர் ஷாட் பார்த்துள்ளோம். அடுத்ததாக, பிசிசிஐயின் ஏரோபிளேன் வாங்கும் நடவடிக்கையையும் பார்க்கலாம்.

Story first published: Sunday, September 10, 2017, 11:11 [IST]
Other articles published on Sep 10, 2017
English summary
BCCI advised to buy Aeroplane for the Indian cricket players
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+