Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா உடன் என்னை ஒப்பீடுவதா? கடுப்பான கபில்தேவ்.. தேர்வுக்குழு குறித்தும் அதிருப்தி

அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய அணித் தேர்வுக்குழு, வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அணியை அறிவித்த பின்னர் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. நட்சத்திர பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆகியோரை அணியில் சேர்க்காதது குறித்து ரசிகர்கள் குறிப்பாக வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் சமீபத்திய மோசமான செயல்திறனை கருத்தில் கொண்டு, நிபுணர்களும் இந்த முடிவுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் வீழ்ச்சியடைந்தது, இது 12 ஆண்டுகால தோல்வியற்ற சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதையடுத்து, 2024-25 ஆம் ஆண்டு போர்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் 3-1 என்ற கணக்கில் தோல்வி காணப்பட்டது. இதற்கு தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்களின் போக்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், தேர்வாளர்களின் இங்கிலாந்து தொடர் மீதான அணுகுமுறை மற்றும் ஒரு சில வீரர்களை அணியில் சேர்க்காத நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை நெருங்கும் நிலையில்அகர் கர் மற்றும் அவரது குழுவின் தேர்வுகள் குறித்து கபில்தேவிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் கபில்தேவ், அவர்களை விமர்சிக்க மறுத்து, அவர்களின் சிந்தனை முறையை தான் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

இது குறித்து பேசிய அவர், "மற்றவர்களின் தீர்ப்பை நான் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்? தேர்வாளர்கள் அதைக் குறித்து நிச்சயமாக யோசித்திருப்பார்கள். எனவே, நான் ஏதாவது சொன்னால், அது அவர்களை விமர்சிப்பது போல இருக்கும். நான் அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. அவர்கள் ஒரு குழு, திட்டமிட்டு, அதைப் பற்றி யோசித்திருப்பார்கள்" என்றார்.

இதே போன்று, கபில் தேவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடையில் ஒப்பீடுகள் இருக்கின்றன. இந்தியா தோற்ற போதிலும், பும்ரா ஐந்து போட்டிகளில் 32 விக்கெட்டுகளை எடுத்து தொடரின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 150 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியுள்ளார், ஆனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இறுதியில் முதுகு வலி ஏற்பட்டது. மாறாக, கபில் 1991/92 டெஸ்ட் தொடரில் 300 ஓவர்கள் பந்துவீசியுள்ளார்.

கபில் தேவ் இந்த ஒப்பீடுகளைப் பற்றி பேசும் போது, வெவ்வேறு தலைமுறை கிரிக்கெட் வீரர்களை ஒப்பிடுவது நியாயமற்றது என்று கூறினார். "தயவுசெய்து ஒப்பிடாதீர்கள். ஒரு தலைமுறையை மற்றொரு தலைமுறையுடன் ஒப்பிட முடியாது. அது தேவையில்லை. இன்று, வீரர்கள் ஒரு நாளில் 300 ரன்கள் எடுக்கிறார்கள். எங்கள் காலத்தில் அப்படி இல்லை," என்றார்.

Story first published: Monday, January 13, 2025, 22:03 [IST]
Other articles published on Jan 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+