For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வணக்கம் சொல்லி தீபாவளி வாழ்த்து.. வியக்க வைத்த கபில் தேவ்.. குவிந்த லைக்ஸ்!

மும்பை : முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லி தீபாவளி வாழ்த்து கூறி உள்ளார்.

கபில் தேவ் சமீபத்தில் ஹார்ட் அட்டாக் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மீண்டு வந்தார். அவர் தான் நலமாக இருப்பதாகக் கூறி தீபாவளி வாழ்த்து கூறினார்.

கபில் தேவ்

கபில் தேவ்

1983 உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ் சில நாட்களுக்கு முன் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அது குறித்த செய்திகள் பரபரப்பை கிளப்பின.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

கபில் தேவ் நிலை குறித்து ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் கபில் தேவ் நல்ல நிலையில் மீண்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது ஐபிஎல் குறித்த தன் பார்வைகளையும் வெளியிட்டு வந்தார். தற்போது அவர் தீபாவளி வாழ்த்து கூறி உள்ளார்.

தீபாவளி வாழ்த்து

அவர் நமஸ்கார், சலாம் எனத் துவங்கி வணக்கம் வரை பல மொழிகளில் வாழ்த்தி தன் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார். அது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. பின் அவர் தன் இதயம் மற்றும் உடல்நலம் குறித்து பேசினார்.

இதயம் எப்படி இருக்கு?

இதயம் எப்படி இருக்கு?

தன் உடல்நிலை குறித்து விசாரித்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறிய அவர் தன் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், இதயம் நன்றாக வேலை செய்வதாகவும் கூறி, இதயத்தை அடித்துக் காட்டினார். அவருக்கு ரசிகர்கள் தீபாவளி வாழ்த்து சொல்லி, அந்த வீடியோவுக்கு லைக்ஸ் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Story first published: Friday, November 13, 2020, 19:00 [IST]
Other articles published on Nov 13, 2020
English summary
Kapil Dev Diwali wish with Vanakkam in Tamil is trending in twitter.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+