Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்தில் குதித்த லெஜெண்ட்.. இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யப்போவது யார் தெரியுமா?

Recommended Video

kapil dev : இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யப்போவது யார் தெரியுமா?- வீடியோ

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் இருக்கிறார்கள். உலகக் கோப்பையோடு இவர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.

ஆனால் தற்போது இவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு இந்திய தீவுகளில் இந்திய அணியின் சுற்றுப்பயணம் முடியும் வரை இவர்கள் பதவியில் நீடிப்பார்கள்.

வேறு என்ன

வேறு என்ன

அதேபோல் இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவின் பதவிக்காலமும் முடிகிறது. தற்போது தேர்வுக்குழுவில் மொத்தம் 5 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எம்எஸ்கே பிரசாத், ககன் கோடா, ஜதின், சரன்தீப் சிங், தேவாங் காந்தி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக்காலம் முடிகிறது.

தேர்வு செய்வார்கள்

தேர்வு செய்வார்கள்

இந்த நிலையில் இவர்களின் பதவிக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ இணையத்தில் வெளியிட்டு உள்ளது. தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர், மற்ற நிர்வாகிகள் ஆகியோரை தேர்வு செய்ய வெளிப்படையாக விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.

என்ன தகுதி

என்ன தகுதி

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இதற்கான தகுதிகளையும் அதில் வெளியிட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர் குறைந்தபட்சம் 2 வருடம் தேசிய அணிக்கு பயிற்சி அளித்து இருக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விளையாடி இருக்க வேண்டும் என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

யார் தேர்வு

யார் தேர்வு

இந்த நிலையில் இவர்களை தேர்வு செய்ய புதிய தேர்வு கமிட்டி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், முன்னாள் இந்திய வீரர் அனுஷ்மான் கேக்வாட், முன்னாள் பெண்கள் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள்.

எப்போது அறிவிப்பு

எப்போது அறிவிப்பு

தற்போது அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஜூலை 30க்கும் பூர்த்தி செய்து விண்ணப்பதாரர்கள் திருப்பி அளிக்க வேண்டும். அதன்பின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணி நடக்கும். ஆகஸ்ட் இறுதியில் பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார். செப்டம்பர் இறுதியில் புதிய பயிற்சியாளர் பதவி ஏற்பார்.

Story first published: Wednesday, July 17, 2019, 15:04 [IST]
Other articles published on Jul 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+