Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அஸ்வினுக்கு ஒரு நியாயம்.. கோலிக்கு ஒரு நியாயமா?” டி20 அணி தேர்வு.. கபில் தேவ் அதிருப்தி பதிவு!

மும்பை: இந்திய அணியில் இருந்து விராட் கோலி ஒரே ஒரு காரணத்திற்காக நிச்சயம் நீக்கப்படலாம் என கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் விராட் கோலியின் இந்திய அணி வாய்ப்புகள் தான்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 11 மற்றும் 20 ரன்களை மட்டுமே அவர் அடித்து ஏமாற்றினார்.

கோலியின் ஃபார்ம்

கோலியின் ஃபார்ம்

தற்போது ரசிகர்களின் கவனம் டி20 கிரிக்கெட் மீது திரும்பியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் 2 சர்வதேச டி20 போட்டிகளில் தான் கோலி விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் 16 இன்னிங்ஸ்களில் 341 ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 115.98 தான் ஆகும். எனவே இதனையெல்லாம் வைத்து கோலியை இந்திய டி20 அணியில் இருந்து புறக்கணிக்கும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

 வெஸ்ட் இண்டீஸ் போட்டி

வெஸ்ட் இண்டீஸ் போட்டி

இதற்கேற்றார் போல தான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் அமைந்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கோலி, தனக்கு ஓய்வு வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் அவர் நீக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரின் எதிர்காலம் பற்றி ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கபில் தேவ் விளக்கம்

கபில் தேவ் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து கபில் தேவ் பேசியுள்ளார். அதில், தற்போதைய சூழலை வைத்து பார்த்தால், கோலி அணியில் இருந்து ஒதுக்கப்பட்டே தீருவார். உலகின் நம்.2 பவுலரான அஸ்வின், இந்திய டெஸ்ட் அணியில் ஒதுக்கப்பட்ட போது, உலகின் நம்.1 பேட்ஸ்மேன் விராட் கோலி அணியில் இருந்து ஒதுக்கப்படலாம்.

Recommended Video

IND vs ENG 5th Test: Bumrah செய்த Captaincy Mistakes | Aanee's Appeal | *Cricket
 பெருமைகளுக்கு பலனில்லை

பெருமைகளுக்கு பலனில்லை

விராட் கோலியின் பழைய ஆட்ட முறை தற்போது இல்லை. அவர் சேர்த்த பெருமைகள் மற்றும் கவுரவங்களை வைத்து நீண்ட நாட்கள் வாய்ப்பு தர முடியாது. சாதிக்க காத்திருக்கும் பல இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வேண்டும். எனவே வீரர்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி சூழலை உருவாக்கி, நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 9, 2022, 12:08 [IST]
Other articles published on Jul 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+