Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களை அசிங்கப்படுத்திய பிசிசிஐ.. கொந்தளித்த கபில் தேவ்.. இங்கிலாந்து தொடரில் சர்ச்சை!

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக பிசிசிஐ எடுத்துள்ள முடிவு முன்னாள் வீரர் கபில் தேவ்- ஐ கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

ப்ரித்விக்கு அழைப்பு

ப்ரித்விக்கு அழைப்பு

இந்த தொடரில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை களமிறக்குவதா அல்லது மயங்க் அகர்வாலை களமிறக்குவதா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் இலங்கை தொடரில் பங்கேற்றிருக்கும் ப்ரித்வி ஷாவை இங்கிலாந்துக்கு அழைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழப்பம்

குழப்பம்

அவர் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் களமிறங்குவார் என்றும் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் புஜாராவுக்கு பதிலாக ப்ரித்வி ஷாவை களமிறக்கலாமா என்ற யோசனைகளிலும் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் அணியில் ஏற்கனவே உள்ள வீரர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

வீரர்களுக்கு அசிங்கம்

வீரர்களுக்கு அசிங்கம்

இந்நிலையில் பிசிசிஐ-ன் திட்டத்திற்கு கபில் தேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தற்போது இருக்கும் அணியை தவிர்த்து வெளியில் இருந்து புது வீரரை அழைக்க வேண்டிய தேவை இல்லை. அணி தேர்வர்களுக்கும் கொஞ்சம் மதிப்பு தர வேண்டும். அணியில் ஏற்கனவே ஓப்பனிங்கிற்கு கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஆகியோர் உள்ளனர். கோலி மற்றும் சாஸ்திரியின் ஆலோசனை இல்லாமல் இவர்களை அணியில் சேர்த்திருக்க மாட்டார்கள். எனவே இவர்களில் இருந்து யாரேனும் ஒருவரை தேர்வு செய்யாமல் ஏன் புது வீரரை அழைக்க வேண்டும்.

தவறான திட்டம்

தவறான திட்டம்

எனக்கு இந்த திட்டம் சரியாக தெரியவில்லை. புதிய வீரர்களை அழைத்தால், அணியில் ஏற்கனவே உள்ள வீரர்களை அசிங்கப்படுத்துவது போன்றது ஆகும். எனவே கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் இணைந்து பிசிசிஐ-ன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சிறந்த வீரர்களை அசிங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Sunday, July 4, 2021, 11:29 [IST]
Other articles published on Jul 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+