Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பையை விடுங்க..! முதலில் அரையிறுதிக்கு போறாங்களானு பாருங்க..இந்தியா குறித்து கபில்தேவ் தடாலடி

லக்னோ : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறி இருக்கும் கருத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில்தேவ், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை கணிப்பது மிகவும் கடினம் என்று குறிப்பிட்டார்.

தற்போதுள்ள டி20 கிரிக்கெட்டில் எத்தனை ஆல் ரவுண்டர்கள் அணியில் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அந்த அணி சிறப்பாக செயல்படும் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

ஆல்ரவுண்டர் முக்கியம்

ஆல்ரவுண்டர் முக்கியம்

இது குறித்து பேசிய அவர், போட்டியை வென்று தரக்கூடிய ஆல் ரவுண்டர்களை தவிர வேறு என்ன உங்களுக்கு அணியில் வேண்டும். உலகக்கோப்பை மற்றும் அனைத்து போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர் இந்தியாவுக்கு சிறப்பாக பயன்படுவார். ஒரு அணி பலமாக இருக்க வேண்டும் என்றால் ஆல் ரவுண்டர்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர் ரோகித் சர்மாவுக்கு சுதந்திரத்தை தருவார்.

கணிப்பது கடினம்

கணிப்பது கடினம்

ரோகித் சர்மா அவரை ஆறாவது பந்துவீச்சாளராக பயன்படுத்தலாம். சிறந்த பில்டராகவும் அவர்கள் இருப்பார்கள். ஜடேஜாவும் இந்தியாவில் சிறப்பான ஆல்ரவுண்டர்களில் ஒருவர். எங்கள் காலத்தில் இந்திய அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருந்தார்கள்.டி20 கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறுவது என்பது குறித்து கணிப்பது கடினம். ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த ஆட்டத்தில் தோல்வியை தழுவுவார்கள் .

30 சதவீதம் தான்

30 சதவீதம் தான்

இதனால் இந்தியாவின் உலகக்கோப்பை வாய்ப்பை கணிப்பது மிகவும் கடினம். பிரச்சினையே முதலில் இந்தியா அரை இறுதிக்கு செல்வார்களா என்று பார்க்க வேண்டும். அரை இறுதிக்கு சென்ற பிறகுதான் அதிலிருந்து கோப்பையை வெல்வார்களா என்று பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரை இந்தியா அரையிறுதிக்கு செல்லவே 30 சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது. பும்ராவுக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள முகமது ஷமி ஒரு நல்ல பந்துவீச்சாளர் தான்.

பாராட்டு

பாராட்டு

ஆனால் அவரை எப்படி ரோஹித் சர்மா பயன்படுத்த போகிறார் என்பதை பொறுத்து அனைத்தும் அமைந்திருக்கிறது. சூரியகுமார் யாதவ் அணியில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.முதலில் அவரை பற்றி யாரும் யோசிக்கக்கூட மாட்டோம் .ஆனால் இப்போது அவர் இல்லாமல் அணியை யோசிக்க முடியாது. சூரியகுமார் யாதவ், கோலி, ரோஹித் சர்மா, ராகுல் போன்ற பலமான பேட்டிங் நமக்கு உள்ளது. கிரிக்கெட் விளையாடும் போது வீரர்கள் அழுத்தத்தை உணர கூடாது. கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக ஆட வேண்டும் மகிழ்ச்சியாக நீங்கள் ஆடும்போது உங்களுக்கு எப்படி அழுத்தம் உண்டாகும்? என்று கபில்தேவ் கூறினார்.

Story first published: Wednesday, October 19, 2022, 21:49 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+