For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி.என்.பி.எல்., கிரிக்கெட்: சீறியது காரைக்குடி காளை.. சிதறியது கோவை கிங்ஸ்

By Karthikeyan

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் காரைக்குடி காளை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 வது ஆட்டம் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

Karaikudi Kaalai beats kovai kings by 36 runs

அந்த அணியில் அதிகபட்சமாக பத்ரிநாத் 53(46) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அனிருத்தா 45 (29) ரன்களும், விஜய் குமார் 35 (21) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். கோவை அணி தரப்பில் முகமது 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல் விக்னேஷ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

காரைக்குடியை தொடர்ந்து விளையாடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அனிருத் சித்தாராம் 35 (29) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

காரைக்குடி அணியில் சோனு யாதவ் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். கோபிநாத் 3 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதனால் காரைக்குடி காளை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள கோவை அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும். காரைக்குடி அணிக்கு மூன்றாவது வெற்றி ஆகும்.

Story first published: Saturday, September 10, 2016, 2:19 [IST]
Other articles published on Sep 10, 2016
English summary
TNPL 2016: Karaikudi Kaalai beats kovai kings by 36 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+