2 பந்து தான்...!! புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? சூப்பர் ஓவரில் திருச்சியை நொறுக்கிய வாரிசு வீரர்
திண்டுக்கல்: ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை, சூப்பர் ஓவர் முறையில் அதிரடியாக 2 சிக்சர்களால் வீழ்த்தினார் அனிருத்தா. இவர் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்தின் மகனாவார்.
டிஎன்பிஎல் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின. முதலில் ஆடிய காரைக்குடி காளை 171 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கு என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. ரூபி திருச்சி வாரியர்சும் 171 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. சூப்பர் ஓவர் முறையில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. களத்தில் முரளி விஜயும், கணபதியும் களம் கண்டனர். அந்த ஓவரை வீசினார் சாம். முதல் பந்தை தூக்கி அடிக்க, 2 ரன்கள் தான் கிடைத்தது. 2வது பந்து புல் டாசானது. ஒரு ரன் தான் வந்தது.

அவுட்டானார் கணபதி
இப்போது பந்தை எதிர்கொள்கிறார் கணபதி. அந்த பந்தை அவர் தூக்கி அடிக்க நேராக பிரசாத் கையில் புகுந்து கொள்ள டக் அவுட்டானார் கணபதி. க்ராஸ் ஓவர் ஆனதால் 4வது பந்தை எதிர்கொண்டார் முரளி விஜய். ஆனால் அந்த பந்தில் ரன் அடிக்க முடியாமல் திணறினார்.

சிக்சர் முரளி
5வது பந்தில் சேர்த்து வைத்து சிக்சர் அடித்தார் முரளி விஜய். ஒரு அழகான சிக்சர் கிடைத்தது. 6து பந்தில் 2 ரன்கள் ஓட முயற்சித்தார். ஆனால், ஒரு ரன் கிடைக்க, 2வது பந்தில் ரன் அவுட்டானார் முரளி விஜய். காரைக்குடி காளைக்கு 12 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ரன் எடுக்க திணறல்
இதையடுத்து, அந்த இலக்கை எட்டுவதற்காக களத்துக்கு வந்தனர். முதல் பந்தை எதிர்கொண்டார் ராஜ்குமார். மற்றொரு முனையில் ஸ்ரீகாந்த் அனிருத்தா இருந்தார். பந்து வீசினார் சாய் கிஷோர். முதல் பந்து டாட் பாலானது. 2வது பந்து லென்த்தாக வர, ஒரு ரன் தான் வந்தது.

அடுத்தடுத்த 2 சிக்சர்கள்
பேக் ஆப் லென்த் பாலாக சாய் கிஷோர் வீச, பந்து சிக்சருக்கு பறந்தது. அடுத்த பந்தும் அதே மாதிரி வர சிக்சர். சூப்பர் ஓவரில் அருமையாக வெற்றி பெற்றது காரைக்குடி காளை. வெற்றிக்கு காரணமான அனிருத்தா, முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகனாவார்.


Click it and Unblock the Notifications